தேசிய விருது பெற்ற டைரக்டர் பாலா நான் கடவுள் படத்தை தொடர்ந்து இயக்கி முடித்திருக்கும் படம் அவன் இவன். இப்படம் மே 22ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
சேது, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் பாலா அடுத்து அவன் இவன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் ஆர்யாவும், விஷாலும் நடித்திருக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக மது ஷாலினியும், ஜனனி ஐயரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் வித்யாசமாக விஷால் அரவானி கேரக்டரில் நடித்து இருக்கிறார். பாலாவின் முந்தைய படங்களை காட்டிலும் இந்தபடம் வித்யாசமாகவும், முதன்முறையாக கமர்ஷியலாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சூட்டிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். தேர்தலால் இப்படம் தள்ளிப்போனது. இப்போது தேர்தலும் முடிந்துவிட்டதால் மே மாதம் 22ம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment