"நாடோடிகள்" படத்திற்கு அடுத்தபடியாக டைரக்டர் சமுத்திரகனி, "போராளி" என்ற படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுப்ரமணியபுரம் சசிகுமாரின் நண்பரும், நடிகரும், இயக்குநருமானவர் சமுத்திரகனி. "சுப்ரமணியபுரம்" படத்தில் சமுத்திரகனியை நடிக்க வைத்தார் சசி, அதேபோல் "நாடோடிகள்" படத்தில் சசிகுமாரை நடிக்க வைத்தார் சமுத்திரகனி. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த வெற்றியை தனது அடுத்த படத்திலும் கொடுக்க நினைத்தார் சசி. அதன்படி தன்னுடைய "ஈசன்" படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்தார் சமுத்திரகனி. இப்போது மீண்டும் சமுத்திரகனி "போராளி" என்ற படத்தை எடுக்க இருக்கிறார். இதில் சசிகுமார் நடிக்கிறார். படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சுவாதி, அபிநாயா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்காடித்தெரு புகழ் அஞ்சலி இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment