தமிழ் திரையுலகில் சமீப காலமாக இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் படங்களுக்கு பிறஇந்தி திரையுலக நாயகிகளை தான் தங்களது படங்களுக்க்கு ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். படத்தை வேறு மொழிகளில் டப்பிங் செய்ய இது பெரிதும் உதவியாக இருக்கும் என்பது போன்ற வியாபார காரணங்களுக்காக பெரிய பட்ஜெட் படங்களில் இப்படி செய்யப்படுகிறது.
ரஜினி தான் நடிக்க இருக்கும் ராணா படத்திற்கு தீபிகா படுகோன் தான் முதல் நாயகியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார். லாரா க்ராப்ஃட் மாதிரியான பாத்திரத்தில் நடிக்க இருப்பதால் தீபிகா தான் நல்ல சாய்ஸ் என்று கூறி வருகிறார்கள்.
கமல் நடிக்க இருக்கும் 'விஸ்வரூபம்' படத்தின் நாயகியாக சோனாக்ஷி சின்ஹாவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். இந்தியிலும் இப்படத்தை வெளியிட இருப்பதால் சோனாக்ஷி நடித்தால் நன்றாக இருக்கும் என்பது தான் காரணமாம்.
விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தின் நாயகியான ஹன்சிகா மோத்வானி இந்தி திரையுலகை சேர்ந்தவர் தான். ரித்திக் ரோஷன் நடித்த "KOI MIL GAYA" படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 'வேலாயுதம்' படத்தில் கிராமத்து பொண்ணாக நடித்து வருகிறார். வேலாயுதம் படத்தின் இன்னொரு நாயகியான ஜெனிலியாவும் இந்தி நாயகிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத் நடிக்க இருக்கும் பில்லா -2 படத்தின் நாயகியாக ஒப்பந்தம் ஆகி இருப்பவர் ஹியூமா குரோஷி. இவர் இந்தி விளம்பர படங்களில் அமீர் கானுடன் இணைந்து நடித்தவர். படத்தின் நாயகி ஸ்டைலாக இருக்க வேண்டும் என இவரை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம்.
சூர்யா நடிக்க இருக்கும் 'மாற்றான்' படத்தின் நாயகிக்காக மும்பை விளம்பர மாடல் பெண்களிடையே தேடுதல் வேட்டை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விக்ரம் நடிக்க இருக்கும் புதுபடத்தில் நடிப்பதற்கு கேத்ரினா கைஃப் இடம் பேசி வருகிறார்கள். விக்ரமிடம் கதை சொல்வதற்கு முன்பே இவரிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம் இயக்குனர்.
சிம்பு நடிக்க இருக்கும் டபாங் ரீமேக்கிலும், நடித்து வரும் 'வேட்டை மன்னன்' படத்திலும் இந்தி நாயகி தான் வேண்டும் என்று தேடி வருகிறார். அதற்காக சோனம் கபூர் இடம் பேசினார், அவரே தன்னிடம் தேதிகள் இல்லை என்று கையை விரித்து விட்டார்.
தனுஷ் நடித்து வரும் 'வேங்கை' படத்தின் நாயகியாக தமன்னா நடித்து வருகிறார். இவர் வேங்கை படத்தில் கிராமத்து பொண்ணாக நடித்து வருகிறார்.
ஜெயம் ரவி நடித்து கொண்டிருக்கும் 'ஆதிபகவன்' நாயகி இந்தி திரையுலகை சேர்ந்த நீத்து சந்திரா. இப்படத்தின் இயக்குனரான அமீர் தமிழ் ஆர்வலர். ஆனால் அவரும் தன் படத்தின் நாயகியாக நீத்துவை தான் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.
ஜீவா நடித்து கொண்டிருக்கும் 'வந்தான் வென்றான்' படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் பஞ்சாப் பைங்கிளி டாப்ஸி.
இறுதியாக ஒரு தமிழ் வரலாற்று கதையான பொன்னர் சங்கர் படத்தின் நாயகிகளாக நடித்த திவ்யா பரமேஷ்வர் மற்றும் பூஜா சோப்ரா இருவருக்கும் தமிழ் தெரியாது.
இந்தி நாயகிகள் ஒருபக்கம் இங்கு வந்து குவிய, இது போதாதென்று தெலுங்கில் இருந்து அனுஷ்கா, சமந்தா, தீபிகா சேத் போன்றோரும் சேர்ந்து கொள்ள, கேரளாவில் இருந்து அமலாபால், அசின், நயன் தாரா, சரண்யா மோகன், பானு, ரம்யா நம்பீசன் ஆகியோர் மலையாளக் கரையிலிருந்து இங்கு ஒதுங்கி இருக்கிறார்கள்
பிற மொழி கதாநாயகிகளை ஒப்புக் கொள்ளும் ரசிகர்கள், பிற மொழி நாயகர்களை ஏன் ஒப்புக் கொள்வதில்லை..?



No comments:
Post a Comment