தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு போட வசதி உள்ளது. தேர்தல் பணியாற்றும் ஊழியர், தேர்தல் பணி நியமன கடிதத்தை தனக்கு ஓட்டுள்ள தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காட்டி, அத்தொகுதிக்கான ஓட்டுச்சீட்டை பெற்று, ஓட்டை பதிவு செய்யலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை, தபால் ஓட்டுகள் அதிகளவில் தி.மு.க.,வுக்குத் தான், காலம் காலமாக கிடைத்து வருகிறது. கடந்த தேர்தலில் தி.மு.க.,வின் முன்னணி தலைவர் ஒருவர், தபால் ஓட்டு மூலமே கரையேறிய வரலாறும் உண்டு. ஆனால், இம்முறை தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த ஓட்டும், தி.மு.க., விற்கு சேருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இத்தேர்தலில் பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில், வெப் - கேமரா மூலம் கண்காணிக்கும் பணிக்கு கல்லூரி மாணவர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இத்தேர்தலில் தான் முதன்முறையாக ஓட்டுப்போடுபவர்களாக உள்ளனர். இவர்களின் ஓட்டு யாருக்கு சாதகமாக அமையும் என்ற சந்தேகமும் தொடர்கிறது.

No comments:
Post a Comment