தமிழகத்தில் இன்று(13.04.11) விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் பிஸியிலும் நேற்று முதல்வர் கருணாநிதி அவருடைய கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள பொன்னர் சங்கர் படத்தை நடிகர் கமல்ஹாசனுடன் பார்த்து ரசித்தார்.
இளைஞன் படத்தை தொடர்ந்து முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை வசனத்தில், தியாகராஜன் இயக்கி, தயாரித்து பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கும் படம் பொன்னர் சங்கர். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. தேர்தல் பிரசாரத்தை முடித்த முதல்வர் கருணாநிதி நேற்று வடபழனி பிரசாத் லேப்பில் பொன்னர் சங்கர் படத்தை பார்த்து ரசித்தார். முதல்வருடன் அன்பழகன், கி.வீரமணி, நடிகர் கமல்ஹாசன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரும் பார்த்தனர்.படத்தை சிறப்பாக எடுத்துள்ளதாக இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜனை அனைவரும் பாராட்டினர்.

No comments:
Post a Comment