ஐபிஎல் போட்டித் தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
சென்னை அணி இதுவரை தான் ஆடிய 9 ஆட்டங்களில் 4 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை தான் ஆடிய 9 ஆட்டங்களில் 5 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இந்த ஐபிஎல் சீஸனில் கொல்கத்தா அணியும் சென்னை அணியும் மோதும் முதல் போட்டி இதுவாகும். சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததால் மைக் ஹஸ்ஸி சென்னை அணிக்கு திரும்பியுள்ளார். குலசேகராவுக்கு பதிலாக இவர் அணியில் இடம்பிடித்துள்ளர். கடந்த போட்டியில் விளையாடிய விரித்திமன் சஹா நீக்கப்பட்டு யோ மகேஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் துவக்க வீரர்களாக மைக் ஹஸ்ஸியும் டூ பிளிசிஸ்ஸும் களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை பிரெட் லீ வீசினார். இவரது சிறப்பான பந்துவீச்சில் டு பிளிசிஸ் (3 ரன்கள்) ஆட்டமிழந்தார்.
இவரையடுத்து சுரேஷ் ரெய்னா, மைக் ஹஸ்ஸியுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆட்டத்தை துவக்கிய ஹஸ்ஸி 18 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இவரையடுத்து ரெய்னாவுடன் பிராவோ ஜோடி சேர்ந்தார். பிராவோ 12 ரன்னும், ரெய்னா 44 ரன்னும், ஜடேஜா 9 ரன்னும் எடுத்து ஆடமிழந்தனர். ரெய்னா 34 ரன்கள் எடுத்தபோது ஐ.பி.எல் போட்டிகளில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை அடைந்தார். ஐ.பி.எல் போட்டிகளில் 2000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையோடு ரெய்னா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
இறுதி கட்டத்தில் டோனியும், மோர்கலும் அதிரடியாக முயன்றனர். எனினும் கொல்கத்தா வீரர்கள் துல்லியமான, பந்துவீச்சினால் அவர்களால் அதிரடி காட்ட முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. டோனி 34 ரன்னுடனும், மோர்கல் 13 ரன்னுடனும் களத்த்ல் இருந்தனர்.
பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கவுதம் காம்பீர், மெக்கெல்லமும் களம் இறங்கி விளையாடினர். ஆட்டத்தின் 3- வது ஓவரில் மெக்கெல்லம் 2 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் கேட்சானார்.
அடுத்து வந்த ஜாக் காலிஸ் காம்பீருடன் இணைந்து விளையாடினார். 13-வது ஓவரில் காலிஸ் 26 ரன் எடுத்திருந்த போது பிராவோ பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதணையடுத்து களம் வந்த மனோஜ் திவாரி 13 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த காம்பீர் 63 ரன் எடுத்து பிராவோ பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் பெவுலியன் திரும்பினார்.
அடுத்து வந்த பதான் 12 வெளியேற அதன் பின் வந்த வீரர்களான தாஸ், சுக்லாவும் சிறப்பாக விளையாடி 19,5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

No comments:
Post a Comment