விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, May 15, 2012

    பெண்களுக்கான ஃபேஸ்புக்


    ஃபேஸ்புக், டிவிட்டருக்கு அடுத்தபடியாக அதிகமானோர் வருகை தரும் சமூக வலைப்பின்னல் தளமாக பின்ட்ரெஸ்ட் வளர்ச்சி பெற்றுள்ளது.

    'பின்ட்ரெஸ்ட்' செய்திகளில் அடிபடும் வேகத்தைப் பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது. இணையத்தில் எங்கு பார்த்தாலும் இப்போது பின்ட்ரெஸ்ட் பற்றி தான் பேச்சாக இருக்கிறது.




    பின்ட்ரெஸ்ட்டை பயன்ப‌டுத்தும் விதம், பின்ட்ரெஸ்ட்டின் செல்வாக்கு,பின்ட்ரெஸ்ட்டின் மார்க்கெட்டிங் தாக்கம் என்று பின்ட்ரெஸ்ட் பற்றி பலவிதமாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

    ஒரு விஷயம் உறுதி; பின்ட்ரெஸ்ட் இன்டர்நெட்டின் புதிய சென்சேஷனாக உருவாகியிருக்கிறது.

    பின்ட்ரெஸ்ட்டில் அமெரிக்க அதிபரும் உறுப்பினராகி இருக்கிறார், சாமான்யர்களும் பின்ட்ரெஸ்ட்டை நோக்கி படையெடுக்கின்ற‌னர். குறிப்பாக பெண்கள் அலை அலையாக உறுப்பினர்களாகி வருகின்றனர். சொல்லப்போனால் பின்ட்ரெஸ்ட் மகளிர் ராஜ்யம் தான். அதில் பெண்களே அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் அதனை 'பெண்களின் பேஸ்புக்' என்றும் சொல்லலாம்.

    பின்ட்ரெஸ்ட்டை காப்பி அடித்து உருவாக்கப்பட்ட தளங்களும் அதிகரித்திருப்பதோடு, போட்டி தளங்களும் உதயமாக துவங்கியிருக்கின்றன. அது சரி, பின்ட்ரெஸ்ட்ட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது?

    பின்ட்ரெஸ்ட்டைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், இணையத்தின் சமீபத்திய‌ போக்கை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இப்போது நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களை பகிர்ந்து கொள்வதற்கான இணையதளங்கள் இருப்பது போல், வாங்கிய பொருட்களின் தரம் குறித்து பகிர்ந்து கொள்ளவும் இணையதளங்கள் இருக்கின்றன! 

    இவ்வாறு செய்வதன் நோக்கமும் பயனும் என்னவென்றால் வாங்க நினைக்கும் பொருளின் தரம் மற்றும் சிறப்பம்சங்கள் அல்லது குறைகள் போன்றவற்றை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதே போல மற்றவர்கள் வாங்கிய பொருட்களின் குறை நிறைகளையும் அவர்களின் பகிர்வு மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வகை இணையதளங்கள் தான் இப்போது இணையத்தின் போக்காக இருக்கின்றன. இவை சுய வெளிப்பாடு தளங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. அதாவது இணையவாசிகள் தங்கள் ரசனைகளையும் விருப்பங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி கொள்ள வழி செய்யும் தளங்கள்.

    வெளிப்படுத்தி கொள்வது என்றால் டிவிட்டர் குறும்பதிவுகள் போலவோ ஃபேஸ்புக் அப்டேட்கள் போலவோ அல்ல!பேஸ்புக்கும், டிவிட்டரும் பக்கம் பக்கமாக வசனம் பேசும் அந்த கால சினிமா போல. இந்த தளங்களில் எல்லாம் மணிரத்னம் ப‌டம் போல வசனங்களுக்கு அதிக வேலை இல்லை. சொல்லப்போனால் எதையும் விவரிக்கவே வேண்டாம். வார்த்தைகளே இல்லாமல் விருப்பங்களை பகிர்ந்து கொள்ளலாம். பின்ட்ரெஸ்ட் இதை தான் செய்கிறது.

    அதெப்படி எதையுமே சொல்லாமல் பகிர்ந்து கொள்ள முடியும் என வியப்பு ஏற்படலாம். இதன் முழு ஆச்சர்யத்தை உணர வேண்டும் என்றால் பின்ட்ரெஸ்ட் இணையதளத்தை பயன்ப‌டுத்தி பார்க்க வேண்டும்.




    பின்ட்ரெஸ்ட் தளம் இணைய குறிப்பு பலகை என்று அழைத்து கொள்கிறது. அதாவது இணையத்தில் குத்தி வைத்து குறித்து வைக்கும் பலகை.

    பள்ளி கல்லூரி போன்ற இடங்களில் அறிவிப்பு பலகை இருக்கும் அல்லவா? அதில் அறிவிப்புகளையும் புகைப்படங்களையும் இதர செய்திகளையும் 'பின்'னால் குத்தி வைப்பார்கள். அதே போல இந்த தளத்தில் இணையவாசிகள் தாங்கள் இணையத்தில் பார்க்கும் சங்கதிளை குத்தி வைத்து கொள்ளலாம். இதற்காக என்று அறிவிப்பு பலகைகளை சுலபமாக உருவாக்கி கொள்ளலாம். எத்தனை பலகைகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.

    இணையத்தில் பார்ப்பவை என்றால் அழகான‌ புகைப்படங்களில் துவங்கி ஆடை வடிவமைப்பு, பூ வேலைப்பாடு, சமையல் குறிப்பு, இணையதளம், கேக் மாதிரிகள், புத்தகங்கள் என்று என்னவாக‌ வேண்டுமானாலும் இருக்கலாம். வீடியோ, செயலிகள் போன்றவற்றையும் பகிர்ந்து.. மன்னிக்கவும்.. குத்தி கொள்ளலாம்.

    வெளியே அலைந்து திரிவதைவிட இப்போது இணையத்தில் அலைவது தான் அதிகமாகிவிட்டது. தினமும் பல தளங்களுக்கு செல்கிறோம். தேடியந்திரம் அல்லது ஃபேஸ்புக் நண்பர்கள் காட்டிய வழியில் பல தளங்களை பார்க்கிறோம். இவற்றில் சிலவற்றை குறித்து வைக்க நினைப்போம். ஆனால் அதன் பிற‌கு மறந்து விடுவோம். தளங்கள் என்றால் புக்மார்க் செய்து கொள்ளலாம். ஆனால் அழகான ஆடையின் வடிவமைப்பையோ அல்லது புதிய மேஜை விரிப்பு அலங்காரத்தையோ பார்த்து ரசித்தால் எப்படி அதனை சேமித்து வைப்பது. புகைப்படம் எனில் அப்படியே டெஸ்க்டாப்பில் சேமித்து கொள்ளலாம். ஆனால் அவற்றை வகைப்படுத்துவதோ பின்னர் எடுத்து பார்ப்பதோ கொஞ்சம் கஷ்டம் தான்.

    பின்ட்ரெஸ்ட்டில் இந்த தொல்லை எல்லாம் கிடையாது. இணையதளத்தில் ஒரு விஷயம்  கண்ணையும் கருத்தையும் கவர்கிறதா, அதை உடனே 'பின்' அதாவது குத்தி கொண்டு விடலாம். குத்துவது என்றால் அந்த படம் அழகாக நமக்கான பலகையில் சேமிக்கப்பட்டுவிடும். பின்னர் எளிதாக அடையாளம் காணும் வகையில் இவற்றுக்கு பொருத்தமான தலைப்பு கொடுத்து வகைப்படுத்தி வைக்கலாம்.

    உதாரணத்திற்கு, 'ஆடைகள்' என்னும் தலைப்பில் ஒரு பலகையை உருவாக்கி உங்களுக்கு பிடித்தமான ஆடை வடிவமைப்பு படங்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்கலாம். 'கல்யாண நகைகள்' என்னும் தலைப்பில் அழகிய வேலைப்பாடு கொண்ட நகைகளின் புகைப்படங்களை சேமித்து வைக்கலாம். இப்படி சேமிப்பது அல்லது குத்துவது மிகவும் சுலபம். பின்ரெஸ்ட்டில் உறுப்பினராகி அதில் உள்ள பிரவுசர் நீட்டிப்பு பட்டையை நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தில் கிளிக் செய்தால் போதும். " 'பின்' செய்யவா தலைவா?" என கேட்கும் பட்டன் எட்டிப்பார்க்கும். அதை கிளிக் செய்தால் போதும். அந்த காட்சி சேமிக்கப்பட்டுவிடும்.

    பின்னர் தேவைப்படும் போது அந்த படத்தை பார்த்து, எந்த தளத்தில் அதனை கண்டோம் என எளிதாக தெரிந்து கொள்ளலாம்.


    இந்த சேமிப்பை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இதே போல மற்ற  உறுப்பினர்கள் சேமித்து வைத்துள்ளவற்றை பார்வையிடலாம். அதில் உள்ள விஷயம் பிடித்திருக்கிறது எனில், அதனை 'லைக்' செய்வதோடு நமது பலகையிலும் சேமித்து வைக்கலாம். ரீடிவீட் போல இது ரீபின். டிவிட்டர் போல எந்த உறுப்பினரையும் பின் தொடரலாம். அவர்கள் சேமிப்பதை உடனுக்குடன்  பார்த்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு விஷயம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாது இன்னும் ஏகப்பட்ட சமூக வலைப்பின்னல் பாணி வசதிகள் உள்ளன.

    இந்த தளத்தில் நுழைந்தால் அதன் முகப்பு பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விஷயங்களின் வகைகளையும் அவற்றின் பரந்துவிரிந்த தன்மையையும் பார்த்து ரசிக்கலாம். கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கும். அந்த அளவுக்கு பகிர்வுகள் பலவகையில் இருக்கும்.

    இந்த அறிவிப்பு பலகை வசதியை பலவிதங்களில் பயன்ப‌டுத்தலாம். ஃபேஷன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்த வடிவமைப்புகளுக்கான டைரியாக பயன்படுத்தலாம். புதிய ஃபேஷன் போக்குகளை தெரிந்து கொள்ளவும் இது கைகொடுக்கும்.

    திருமணம் போன்ற‌ வைபவங்களுக்கு ஆடை வாங்கும் போது நாம் பார்த்த டிசைன்களை இங்கே குறிப்பிட்டும் உற‌வினர்கள் நண்பர்களை அழைத்து ஆலோசனை கேட்க‌லாம். அவர்கள் பரிந்துரைக்க விரும்புவதை 'பின்' செய்வதன் மூலமோ சுட்டிக்காட்டலாம். கருத்துக்கள் வழியே யோசனை கூறலாம்.




    வீட்டிற்கான உள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தால் நாம் தேர்வு செய்த மாதிரிகளை இங்கே பகிர்ந்து கொண்டு அவை பற்றிய  கருத்துக்களை கேட்க‌லாம்.

    மனதுக்கு ஊக்கம் அளிக்க கூடிய விஷயங்களை, சமையல் குறிப்புகளை, வீடியோ காட்சிகளை என எவற்றை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.

    அமெரிக்க பெண்மணி இந்த தள‌த்தில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் மூலமாக‌ அவரது கணவர் இப்பெண்மணியின் ரசனை பற்றி அதிகம் தெரிந்து கொண்டு அவர் தன் பங்கிற்கு சிலவ‌ற்றை பரிந்துரை செய்து வியப்பளித்துள்ளார். இதனால் நெகிழ்ந்து போன அந்த பெண்மணி 'என் கணவ‌ருக்கு பிடித்தவை' என்னும் தலைப்பில் ஒரு பலகையை உருவாக்கி அவருக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    இப்படி பல அற்புதங்களும் சாத்தியமாகலாம்.

    ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் போரடித்திருந்தால் 'பின்ட்ரெஸ்ட்டை' பயன்ப‌டுத்தி பாருங்கள். அதன் பின், உங்கள் மனம் பின்ட்ரெஸ்ட்டில் பின் செய்யப்பட்டிருக்கும்!

    இணையதள‌ முகவரி: http://pinterest.com/



    Posted by விழியே பேசு... at 8:44 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ▼  May (561)
      • ஜெகன்மோகன் ரெட்டி கைது! ஆந்திராவில் பலத்த போலீஸ் ...
      • கருணாநிதியை சந்திக்க கோர்ட்டில் அனுமதி கேட்க்கும் ...
      • இன்னொரு ஸ்ரீதேவியாக உருவாவாரா தமன்னா?
      • ஐபிஎல் 5 தொடரில் ஜொலித்த இளம்வீரர்கள்
      • டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகா...
      • காம்பீர் என்னை விட ஆக்ரோஷமான கேப்டன்: டோனி சொல்கிறார்
      • மீண்டும் அசத்த வருகிறார் 'ஆச்சி' மனோரமா!
      • ஆட்டோ கட்டணம் உயர்வால் சைக்கிள் ரிக்ஷாவுக்கு மாறிய...
      • முல்லைப் பெரியாறு அணையில் தமிழக போலீஸை நிறுத்துவோம...
      • பெரம்பூரில் மங்காத்தா நடிகர் குத்திக் கொலை: 3 ஆட்...
      • பாஜகவுக்கு உடம்பு சரியில்லை... ராம் ஜேத்மலானி நக்கல்
      • வெப்சைட்டில் விபசார அழகியாக கோ பட நடிகை காஜல் !
      • நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு இந்திய மாண...
      • இலங்கையில் தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பு: இங்க...
      • இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பா...
      • பிறந்த நாள் ஸ்பெஷல் : மனோரமா
      • எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை...
      • திருமணம் லேட்டாகுதா? பரிகார பூஜைக்கு அழைத்து செல்க...
      • உல்பா தீவிரவாதிகள் விடுத்த 'பந்த்' அழைப்பை புறக்கண...
      • பாரதீய ஜனதாவில் எடியூரப்பா ஒரு 'மனித வெடிகுண்டு': ...
      • ஐ.பி.எல்.5: ஹாட்ரிக் சாதனை படைக்குமா சென்னை சூப்பர...
      • நக்சல் தலைவர் கைது
      • 15 ஊழல் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டது ஹசாரே குழு!
      • எண்ணெய் நிறுவனங்கள் சேவை நிறுத்தம்: டீசல் இல்லாமல்...
      • பிரபு யார்..? கார்த்திக் யார்..?
      • அமெரிக்காவின் முடிவுக்கு சீனா கண்டனம்
      • பிரஸ்சல்ஸ் ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையரில் சானிய...
      • முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்...தூக்கில் தொங்கிய...
      • சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
      • பில்லா 2 இடைவேளையில் வாலை விடும் சிம்பு
      • ராமேசுவரத்தில் பரபரப்பு 500 மீட்டர் தூரத்திற்கு உள...
      • பெட்ரோல் 'குண்டைத்' தொடர்ந்து மக்களை தாக்க ஜூன் ம...
      • புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, ...
      • தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுங்கள்: மமதா...
      • தண்டவாளத்தில் ஏறும் தமிழக ஐ.டி. அமைச்சரின் வண்டவாளம்
      • மக்கள் எங்களிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நாங்கள் உண...
      • பாலியல் புகாரில் சிக்கினால் ஆசிரியர்கள் இனி டிஸ்மி...
      • காதலன் ராஜேஷ் உடன் ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்
      • புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது! பார்த்திபன் ...
      • அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும்! ஸ்ரு...
      • 'பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்...
      • ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர...
      • காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: விரைவில் மின்வெ...
      • சென்னை சூப்பர் கிங்ஸ் பைனலில் நுழைந்தது... விசில் ...
      • நரேந்திர மோடிக்கும் சஞ்சய் ஜோஷிக்கும் என்னதான் பிர...
      • பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா விரைவில் ம...
      • புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளரை எதிர்க்கும் அதிமுக ...
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: எஸ்ஸார் மற்றும் லூப் நிறுவ...
      • ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெ: அன்புமணி
      • பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: மாநிலங்களில் பந்த் அ...
      • அடுத்த சாவித்ரி.. எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த 'கீரோயி...
      • மதுரை ஆட்சியர், எஸ்.பி. மாற்றத்தின் பின்னணி என்ன?
      • விஜய்க்கு என்ன 17 வயசா? பிரபுதேவாவை கேட்ட அக்ஷய் க...
      • உதயகுமார் கேள்விகளுக்கு இந்திய அணுமின்கழகம் பதில்
      • நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்
      • தாண்டவம் எனக்கு இன்னொரு மங்காத்தா: லக்ஷ்மி ராய்
      • ஆப்கானிஸ்தானில் பள்ளி மாணவிகள் மீது தீவிரவாதிகள் வ...
      • கார்த்திக்கு வயசு 35: தலைவர்கள் ரேஞ்சில் பிறந்தநாள...
      • மானபங்க விவகாரம்: கிரிக்கெட் வீரருக்கு எதிரான வழக்...
      • தன்னைத் தானே எதிர்த்து 30-ம் தேதி திமுக போராட்டம்!
      • முதுநிலை ஆசிரியர்களுக்கான 2800 காலி இடங்களுக்கு நா...
      • பெட்ரோல் விலை உயர்வில் தி.மு.க.வுக்கு பங்கு உண்டு:...
      • ஆருஷியை கொன்றது பெற்றோரே: நீதிமன்றத்தில் சி.பி.ஐ வ...
      • மும்பைத் தாக்குதலில் உண்மை குற்றவாளிகள் விசாரிக்கப...
      • ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் 3 ஆயிரம் பேருக்...
      • பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடி தகுதியானவர்: எடியூரப்பா
      • குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலின் மாளிகையில் திர...
      • அடங்கொப்புரானே... கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு...
      • விவேகானந்தரும், நித்தியானந்தாவும் ஒன்று :டிராபிக் ...
      • பெட்ரோல் விலை குறைக்கப்படமாட்டாது: இந்தியன் ஆயில் ...
      • ஷங்கரின் நாயகியான அசின்!
      • ஜூனியர் ஆட்டிஸ்டுகளை விபச்சாரத்தி்ல் தள்ளிய 'கோலங்...
      • பிளஸ் டூ தேர்வு எழுதிய மகள் பாஸ், தந்தை ஃபெயில்
      • பெட்ரோல் விலை ரூ. 7.50 உயர்வு: மக்கள் ஏமாந்தவர்களா...
      • புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடக் கூடாது...ரஜினி ...
      • பெட்ரோலைத் தொடர்ந்து டீசல்- சமையல் கேஸ் விலையும் உ...
      • மும்பையில் நடைபெற்ற ஜனாதிபதியின் கப்பல்படை ஆய்வுக்...
      • பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் ...
      • என்னைக் கொல்ல மாவோயிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், 6 நா...
      • என் தந்தையால் என் உயிருக்கு ஆபத்து: பிசிசிஐ தலைவர்...
      • ராமஜெயம் ஸ்டைலில் இன்னொரு கொலை
      • புதுமணத்தம்பதியர் தூக்குப்போட்டு தற்கொலை: திருமணமா...
      • வெளிநாட்டுப் பெண் என்று கூறியதற்காக சோனியா என்னை ம...
      • பீகாரில் முதல்-மந்திரி யாத்திரையில் சென்ற வாகனங்கள...
      • ஏழைகள் விடும் கண்ணீர் மத்திய அரசை அழித்து விடும்-ஜ...
      • ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று போட்டி: சென்னை சூப்பர் க...
      • பின்லேடனை காட்டிக் கொடுத்த பாக். டாக்டருக்கு 33 ஆண...
      • இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே ...
      • மத்தியில் அரசு செயல்படுதா? என்று மக்கள் கேட்கின்றன...
      • ஜனாதிபதி தேர்தல்: காங்கிரசுக்கு முலாயம்சிங் ஆதரவு
      • இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவது ம...
      • ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டம்: புனே அணியின் அலுவல...
      • ஐ.பிஎல்.5: பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் : ஐ.பி.எ...
      • முன்னாள் வீரர்களுக்கு ஊக்கத்தொகை: கபில்தேவ், அசார...
      • கேரளாவில் வசிப்பதற்கே பயமாக உள்ளது: மோகன்லால் அச்சம்
      • ஹஜ் பயண மானியம் ரத்தா? அமைச்சர் கிருஷ்ணா பதில்
      • பிரதமர் அளித்த விருந்தில் முதல் வரிசையில் இடம் பிட...
      • அமெரிக்க பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோருவதற்கு தைரியம...
      • ஜேம்ஸ்பாண்டின் புதியபடமான 'ஸ்கை பால்' டிரெய்லர் வெ...
      • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார பந்துவீச்சு-டெல்லி டேர...
      • ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடங்கி மூன்று வரு...
      • கார்த்தியின் 'சகுனி' அரசியல்வாதிகளுக்கு எதிரான படம...
      • இன்றைய செய்திகள் (22-05-2012)(செய்தி,சினிமா, விளைய...
      • நடிகர் சங்கத் தேர்தல்... ராதாரவிக்கு எதிராக குமரிம...
      • கடும் 'பசியில்' மத்திய அரசு.. 'டயட்டில்' திமுக! வி...
      • பிளஸ்டூவில் தேர்வில் கலக்கிய பேரறிவாளன் 1096, முரு...
      • ஆந்திராவில் இரு ரயில்கள் மோதி, தீப் பிடித்து 25 பே...
      • வயிறு வலின்னு வந்த மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது
      • +2 தேர்வில் நாமக்கல் சுஷ்மிதா முதலிடம்-3 இடங்களும்...
      • ஃபேஸ்புக்கில் ஆசிரியைகளை விலைமாதுகளாக சித்தரித்த ம...
      • நியூயார்க் சர்வதேச பட விழாவுக்கு ‘3’ படம் தேர்வானது
      • ப்ளஸ் டூ தேர்வில் 86.7% பேர் தேர்ச்சி - மாணவியரே வ...
      • தென் மாநிலங்களில் மின்வெட்டு அபாயம்
      • அரவான் நஷ்டத்தை ராட்டினம் சரிகட்டிய கதை!!
      • முல்லைப்பெரியாறை தொடர்ந்து கேரளாவின் அடுத்த வம்பு
      • நடிகையின் இடுப்பில் டான்ஸ் மாஸ்டர்
      • ராஜா வரவேற்பு - தி.மு.க., வருத்தம்
      • பகலவன் படத்தில் விஜய் இல்லை சீமான் அறிவிப்பு
      • அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவ...
      • நேட்டோ மாநாட்டில் ஒபாமாவின் உரையில் பாகிஸ்தான் அதி...
      • இன்றைய செய்திகள் (21-05-2012)
      • ஜெயலலிதாவின் ஜனாதிபதி வேட்பாளரை சொந்த கட்சியே ஆதரி...
      • ராட்டினம் திரைப்பட வீடியோ பாடல்கள்
      • பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்திக்க பராக் ஒபாமா ம...
      • ஜூன் மாத இறுதியில் கோச்சடையான் இசை!
      • ஊட்டி, கொடைக்கானலுக்கு மின்வெட்டில் இருந்து விலக்க...
      • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்
      • விஜயகாந்த் ஆதரவு கேட்டால் மேலிடம் முடிவு செய்யும்-...
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.