விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, August 6, 2012

    ஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி பணம்... 'ரா' தகவல்


    துபாயில் உள்ள Emirates NBD வங்கியில் ஆ.ராசாவின் பணம் என்று கருதப்படும் ரூ.110 கோடி ராஜேஷ் ஜெயின் என்பவரின் கணக்கில் பினாமியாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக 'ரா' உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.

    இந்தப் பணம் முறைகேடான ஹவாலா முறையில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் 'ரா' கூறியுள்ளது.

    2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, அந்தத் துறையின் சில அதிகாரிகள், தொலைத் தொடர்பு நிறுவன அதிபர்கள், திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாகி சரத்குமார் என பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.

    இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பொருளாதாரக் குற்றங்கள், அன்னிய செலாவணி முறைகேடுகள், வெளிநாட்டு தொடர்புகள் போன்ற அம்சங்கள் அடங்கி இருப்பதால் இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவற்றுடன் இந்தியாவின் வெளிநாட்டு உளவுப் பிரிவான 'ரா' உளவு அமைப்பும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விசாரணை நடத்தி வருகின்றது.

    முறைகேடாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கித் தந்த ராசாவுக்கு பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பல கோடிகளை லஞ்சமாகத் தந்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் பணம் ராசாவுக்குத் தரப்பட்டதை இதுவரை சிபிஐயால் நிரூபிக்கப்படவில்லை.

    இந்தப் பணம் வெளிநாடுகளில் ராசாவின் பினாமிகள் பெயரில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதும் அமலாக்கப் பிரிவு லண்டன், மொரீசியஸ், மலேசியா, ஐசில் ஆப் மேன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த விசாரணைகள் ஒரு பக்கம் நடந்தாலும் வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'வும் தனியே விசாரணை நடத்தி வருகிறது. ராசாவுக்குத் தரப்பட்ட பணம் ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்குப் போய், அங்கிருந்து இந்தியாவுக்கு ரகசியமாக திரும்பி வந்து பல்வேறு இடங்களில் முதலீடு ஆகியிருக்கலாம் என்ற கோணத்தில் 'ரா' அமைப்பின் விசாரணை நடக்கிறது.

    இந்த விசாரணைகளில் சில திடுக்கிடும் விவரங்களை 'ரா' கண்டுபிடித்துள்ளது. ஆ.ராசா ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.

    இது குறித்து கடந்த மாத இறுதியில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் மற்றும் சி.பி.ஐ ஆகியவற்றுக்கு 'ரா' ஒரு கடிதம் எழுதியுள்ளது.

    அந்தக் கடிதத்தில், துபாயில் வசித்து வரும் ராஜேஷ் ஜெயின் என்பவர் மூலம் ராசா மற்றும் அவரது கூட்டாளிகள் ஹவாலா முறையில் பல வெளிநாடுகளுக்கு பணத்தைக் கொண்டு சென்றுள்ளனர்.

    இந்த ஜெயின் சென்னையில் ஜே.ஜி. குரூப் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் ஐக்கிய அரபு நாடுகள், ஹாங்காங், சீனா மற்றும் பல்வேறு நாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களின் வேலையே ஒரு நாட்டில் இருந்து பணத்தை ஹவாலா முறையில் இன்னொரு நாடுகளுக்குக் கொண்டு செல்வது தான்.

    இவர் மூலமாக ராசா மற்றும் அவரது ஆட்களின் பணம் முறைகேடான ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்குப் போயுள்ளது என்று 'ரா' தனது கடிதத்தில் கூறியுள்ளது.

    குறிப்பாக துபாயில் Euro eagle General Trading FZC, Global Trade Commodities DMCC and King Power Industrial Limited ஆகிய மூன்று நிறுவனங்களை ஜெயின் நடத்தி வருகிறார். இவை மூலம் ஏராளமான அன்னிய செலாவணி பணம் முறைகேடாக வேறு நாடுகளுக்குப் போயுள்ளது.

    துபாயில் உள்ள Emirates NBD வங்கியில் ஜெயினின் கணக்கில் சுமார் 20 மில்லியன் டாலர் (ரூ. 110 கோடி) அளவுக்கு பிக்ஸட் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் ராசாவுடையதாக இருக்கலாம் என்றும் 'ரா' குறிப்பிட்டுள்ளது.

    ராஜேஷ் ஜெயினின் சகோதரர்களான தெளலத் ஜெயின், மகேஷ் ஜெயின் ஆகியோர் தான் ஜே.ஜி. குழுமத்தின் சென்னை, டெல்லி அலுவலகங்களை நிர்வகித்து வருகின்றனர். 'ரா'வின் கடிதத்தைத் தொடர்ந்து இந்த இரு அலுவலகங்களிலும் சில நாட்களுக்கு முன் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.

    மேலும் ஜெயினின் பணப் பரிவர்த்தனை குறித்து விவரங்கள் தருமாறு ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியத் தூதரகம் மூலம் சிபிஐ கடிதமும் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஜெயின் சகோதரர்களை விசாரிக்கவும் அமலாக்கப் பிரிவும் சிபிஐயும் திட்டமிட்டுள்ளன.

    ஆனால் ராசாவின் வழக்கறிஞரான மனு ஷர்மா கூறுகையில், 'ரா' கடிதம் தொடர்பாக அமலாக்க பிரிவோ, சி.பி.ஐ. அதிகாரிகளோ ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தவில்லை என்றார்.

    Emirates NBD வங்கி அவ்வளவு எளிதில் தனது வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை வேறு நாடுகளுக்குத் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிபிஐயின் முயற்சி எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது தெரியவில்லை.


    Posted by விழியே பேசு... at 8:15 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ▼  August (482)
      • கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...
      • பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...
      • தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...
      • இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்
      • சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்
      • பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...
      • குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...
      • ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...
      • உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...
      • இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!
      • பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !
      • பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...
      • சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...
      • திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...
      • கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!
      • திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...
      • ஒரே கதையில் இரண்டு படங்கள்
      • மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...
      • பட முன்னோட்டம் : முகமூடி
      • பிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...
      • ஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...
      • ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...
      • அமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...
      • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...
      • கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...
      • ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...
      • ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...
      • பத்திரிகையாளர்களிடம் அழகிரி டென்சன்
      • கிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை!
      • எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் சமுத்திரக்கனி - இயக்க...
      • பட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்கு
      • உடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து
      • கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...
      • இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...
      • ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...
      • இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...
      • பாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...
      • கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு
      • கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
      • சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...
      • அமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
      • கமலுடன் மோதுகிறார் சூர்யா!
      • ராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்
      • சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?:...
      • இந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...
      • தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்
      • 4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...
      • ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...
      • பில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை
      • கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...
      • 'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்
      • தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...
      • இரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...
      • மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...
      • செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...
      • சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா
      • தற்கொலைக்கு முயலவில்லை:மாத்திரைகளை தின்றுவிட்டேன்-...
      • கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
      • நிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...
      • தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...
      • விதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...
      • எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...
      • பார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...
      • சூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...
      • மாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...
      • தமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...
      • நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி
      • கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம்
      • வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...
      • ரஜினி ரசிகரான சசிகுமார்!
      • கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...
      • செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...
      • 'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...
      • மலேசியாவிலும் நித்தி.யால் சர்ச்சை
      • தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு
      • கார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...
      • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...
      • செந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...
      • ஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாதனை
      • அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...
      • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா?: ஈ....
      • மன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...
      • தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்
      • வருகிறது இன்னொரு மைனா
      • அசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...
      • நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...
      • ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
      • யுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்
      • பென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்
      • விஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க! பார்த்த...
      • ஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு!
      • அன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...
      • ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!
      • இந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...
      • நாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...
      • இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?- இந்தியா ...
      • அண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...
      • பொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...
      • விபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...
      • ஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.