மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதினமாக சமீபத்தில் பொறுப்பேற்ற நித்யானந்தாவுக்கும், தனக்கும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை என அம்மடத்தின் மூத்த ஆதீனமான அருணகிரி ஞானசம்பந்த சுவாமி கூறியுள்ளார். எனினும் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை ஆதீனத்தின் விதிகளை, நித்யானந்தாவின் சீடர்கள் மீறி வருவதை மூத்த ஆதீனம் கண்டித்துள்ளார்.
கும்பகோணத்திலுள்ள திருப்பாரம்பரியம் கோயிலில் இதுபற்றி பேசிய ஆதீனம், ‘நித்யானந்தாவின் சீடர்கள் செய்யும் தவறுகளை நாங்கள் திருத்தி வருகிறோம்’ என்றார். மேலும், தனக்கும் தர்மபுரம் ஆதீனத்துக்கும் கருத்துவேறுபாடுகள் இல்லை எனவும், தான் விரைவில் தர்மபுரம் ஆதீனத்தை தொடர்புகொண்டு பேச இருப்பதாகவும் மூத்த ஆதீனம் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment