தமிழ்நாட்டில் சென்னையை தவிர புற மாவட்டங்களில் தினமும் 8 முதல் 10 மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. வேலூரில் 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. பகல் 6 மணி நேரமும், இரவில் 4 மணி நேரமும் மின்வெட்டு நிலவுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி, பண்ருட்டி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுமார் 12 மணி நேரம் மின்சார வெட்டு உள்ளது. இரவில் 4 முறை மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் தூக்கமின்றி அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் தினமும் 12 மணி நேரம் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டது. இரவில் மட்டும் சுமார் 5 மணி நேரம் மின் சப்ளை பாதிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் தினமும் 8 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. நகர் பகுதியில் காலை 9-12, மதியம் 3-6 என்ற கணக்கில் 6 மணி நேரமும், மற்றபடி அரை மணி, முக்கால் மணி நேரத்திற்கு ஒருமுறையும் மின்தடை ஏற்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் 10 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. காலை 6 மணி முதல் 9 மணி வரையில் 3 மணி நேரம், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை 3 மணி நேரம் மட்டுமே மின் வாரிய அலுவலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற சமயங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை, கொசு வலை தயாரிக்கும் தொழிற்சாலைகள் முடங்கிப்போய் உள்ளன. அத்துடன் பஸ் பாடி கட்டும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இரவில் தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் அதிகாலை 2-3 மணி, 4-5 மணி, 6-9 மணி, நண்பகல் 12- 3 மணி, இரவு 7-8 மணி, 10-11 மணி வரையும் ஆக மொத்தம் 10 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாள் ஒன்றுக்கு 10 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. புறநகர் மற்றும் கிராமங்களில் 12 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தஞ்சையில் தற்போது தினமும் 10 மணி நேரம் வரை மின் வெட்டு தொடர்கிறது. அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை, பகல் 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 3 மணிமுதல் 6 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை, 10 மணிமுதல் 11 மணி வரை பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு நீடிக்கிறது. இது தவிர அவ்வப்போது முன் அறிவிப்பின்றி சுமார் மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. தினமும் 10 மணி நேரம் வரை மின் வெட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் தினமும் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. ஒரு சில பகுதிகளில் 6 மணி முதல் 9 மணி வரை மின்தடை ஏற்படுகிறது. மின்தடை காரணமாக தொழிற்சாலைகள், பவுண்டரிகள், ஜவுளி, விசைத்தறி கூடங்கள், பம்ப்செட் தொழிற்சாலைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் பல கோடி ரூபாய்க்கு உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலும் தினந்தோறும் 12 மணி நேரம் வரையில் மின் தடை ஏற்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 7 மணி நேரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 மணி நேரம், நாமக்கல் மாவட்டத்தில் 8 மணி நேரம், சேலம் மாவட்டத்தில் 10 முதல் 11 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஈரோட்டில் 12 மணி நேரம் மின்தடை நிலவுகிறது. மதுரையில் பல பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் பின்னர் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையும் மின்வெட்டு நிலவுகிறது. அதோடு இரவு 10 மணி முதல் ஒரு மணி நேரம் விட்டு விட்டு மின் வெட்டு ஏற்படுகிறது. இந்த மின்வெட்டால் உழைத்து களைத்த மக்கள் தூங்க முடியாமலும், கொசுக் கடியாலும் அவதிப்படுகின்றனர்.
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் விவசாயம், தொழில் மற்றும் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் தூங்க முடியாமல் அல்லல்படுகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் பகலில் 6 மணி நேரம், இரவில் 7 மணி நேரம் என மொத்தம் 13 மணிநேரமும் மின் தடை ஏற்படுகிறது. இது பற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

No comments:
Post a Comment