செவ்வாய்க்கிரகத்தில் இருந்து கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பியிருக்கும் படங்களில் காணப்படும் மர்ம பொருளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கியூரியாசிட்டி அனுப்பியிருக்கும் மர்ம பொருள் வேற்றுகிரகவாசிகளின் வேவு கப்பல்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாம் வாழுகிற பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது செவ்வாய் கிரகம்! இங்கு உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய அமெரிக்காவின் நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் அடிவானப் பகுதியில் மர்மமான 4 பொருட்கள் அசைந்தாடுவது போன்ற படங்களை கியூரியாசிட்டி அனுப்பி வைத்திருக்கிறது. இந்த மர்ம பொருள் அங்குமிங்கும் அசைந்தாடக் கூடியதாக இருக்கிறது. இருப்பினும் அது என்ன என்று உறுதியாக சொல்ல முடியாததாகவும் உள்ளது. இது தொடபாக விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன.
நாம் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேற்றுக்கிரகவாசிகள்தான் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தற்போது தொடங்கியிருக்கும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை தங்களது கப்பல்கள் மூலமாக வேவு பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது ஒருதரப்பு விஞ்ஞானிகளின் கருத்து. மற்றொரு தரப்பினரோ தொழில்நுட்பத்தில் ஏற்படும் பிக்சல்கள்தான் இந்த அசைந்தாடும் பொருட்கள் என்கின்றனர். இதேபோல் இவை அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களா? அல்லது துகள்களா? என்ற சந்தேகமும் உள்ளது.
No comments:
Post a Comment