லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் லீக் சுற்றுகளில் வேண்டுமென்றே எதிர்ஜோடிகளிடம் தோற்ற 8 பாட்மிண்டன் வீராங்கனைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனின் நடைபெற்று வரும் நடப்பு ஒலிம்பிக் போட்டிகள் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
முக்கியமாக குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த முன்னணி சீன வீராங்கனைகள் யூ யாங், வாங் சியோலி ஆகியோர் முதல் இரு ஆட்டங்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்று விட்டனர்.
மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற இருவரும் தோல்வியடைவதற்காக விளையாடியுள்ளனர். போட்டியைக் காணக் கூடியிருந்த ரசிகர்களே இதனை புரிந்து கிண்டல் செய்தனர். இதேபோல் இந்நிலையில் தென் கொரியாவின் ஜூங் கியாங் - கிம் ஹா நா இணையை எதிர்கொண்டது. தரவரிசையிலேயே இடம்பெறாத தென் கொரிய ஜோடியிடம், சீன வீராங்கனைகள் வேண்டுமென்றே தோல்வியடைந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. இந்த ஆட்டத்தில் வென்றால் தங்கள் நாட்டைச் சேர்ந்த மற்றொரு முன்னணி ஜோடியை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதாலேயே சீன வீராங்கனைகள் திட்டமிட்டு தோற்றுள்ளனர்.
இப்படி குறுக்கு வழியில் ஆடிய 8 பெரில் 4 பேர் தென்கொரிய வீராங்கனைகள். மற்ற நால்வர் சீனாவையும் இந்தோனேஷியாவையும் சார்ந்தவர்கள். போட்டிக்குப் பின் இது தொடர்பாகப் பேசிய சீன வீராங்கனை யூ, "நாங்கள் ஏற்கெனவே காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டோம். பின்னர் ஏன் கஷ்டப்பட்டு விளையாடி, சக்தியை வீணடிக்க வேண்டும். அடுத்த சுற்றில் சிறப்பாக விளையாடுவோம்' என்றார்.
இத்தகைய சர்ச்சைகளைத் தொடர்ந்து புகாருக்கு உள்ளான வீராங்கனைகள் பங்கேற்ற ஆட்டங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இதில் அவர்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி விளையாடவில்லை, வேண்டுமென்ற மோசமாக விளையாடியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா புகார்
இதேபோல் ஜப்பான் பாட்மிண்டன் வீராங்கனைகளுக்கு எதிராக இந்தியா அளித்த புகாரை, போதிய ஆதாரம் இல்லை என்றுகூறி நிராகரித்துவிட்டது ஒலிம்பிக் குழு.
கடந்த செவ்வாய் இரவு சிங்கப்பூர் ஜோடிக்கு எதிரான மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஜுவாலா-அஸ்வினி ஜோடி வெற்றிபெற்றது. 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றபோதும் இந்திய ஜோடியால் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் அணி, சீனதைபேவிடம் தோற்றதாலேயே இந்தியாவின் வாய்ப்பு பறிபோனது.
இந்த நிலையில் தென் கொரியா, சீனா மற்றும் இந்தோனேசிய வீராங்கனைகள் 8 பேர் வேண்டுமென்ற தோற்றதாகக் கூறி ஒலிம்பிக்கில் இருந்து புதன்கிழமை தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் சீனதைபேவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனைகள் சரியாக விளையாடவில்லை என்று இந்தியா தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால் போதிய ஆதாரம் இல்லையென்று என்று கூறி இந்தியாவின் புகாரை ஒலிம்பிக் கமிட்டி நிராகரித்துவிட்டது.
No comments:
Post a Comment