புதுவை மாநில அமைச்சரவையில் கல்விதுறை அமைச்சராக இருந்தவர் கல்யாணசுந்தரம். இவர் கடந்த செப்டம்பர் மாதம் திண்டிவனத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தனிதேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எழுதியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மற்றும் அவருக்கு உதவிய 3 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் கல்யாணசுந்தரம் தலைமறவானார். பின்னர், சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் பெற்றார். இதற்கிடையே அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நீக்கினார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
கல்யாணசுந்தரத்தின் கையெழுத்து பிரதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் தேர்வு எழுதியது கல்யாணசுந்தரம் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கல்யாணசுந்தரம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யாவிட்டாலும் காப்பி அடித்து எழுதியதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி விழுப்புரம் குற்றவியல் போலீசார் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகையை தாக்கல் செய்தன.
இதனையடுத்து நீதிபதி சரிதா கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆஜராக உத்தரவிட்டார். இதன்படி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், ஆசிரியர் ஆதவன், கல்விதுறை ஊழியர் ரஜினிகாந்த் ஆகியோர் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அவர்களுக்கு குற்றபத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment