இணைய தளத்தின் சமூக வலைத் தளமாக இருப்பது பேஸ்புக் இதன் மூலம் உலகம் முழுவதும் தகவல்களையும், செய்திகளையும் கொண்டு செல்ல முடியும்.
எனவே, இணைய தளத்தில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்க பலரும் ஆர்வம் காட்டு கின்றனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தொடங்கியுள்ளனர்.
பொதுவாக ஒரு பொருளுக்கு கிராக்கி ஏற்படும் போது, கூடவே போலியும் வந்து விடுவதுண்டு போலிகள் இணைய தளத்தையும் விட்டு வைக்க வில்லை. உலகம் முழுவதும் 8.3 கோடி போலி பேஸ்புக் பயன் பாட்டாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லண்டனை சேர்ந்த பி.பி.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலகம் முழுவதும் இணையதளத்தில் 95.5 கோடி பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில் 8.7 சதவிதமும் அதாவது 8.3 கோடி பேஸ் புக்ககள் போலியானவை.
பேஸ்புக்கில் கணக்கு தொடங்குபவர்கள், தங்களைப் பற்றிய உண்மையான தகவல்களை குறிப்பிட வேண்டும். ஆனால் மேற்கண்ட எண்ணிக்கையிலான நபர்கள் தவறான தகவல்களை தந்துள்ளனர். இதில் மூன்று வகையான போலிகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
அதாவது ஏற்கனவே முறையான தகவல்களுடன் கணக்கு வைத்திருப்பவர்கள், போலி பெயரில் கூடுதலாக பேஸ்புக் கணக்கை தொடங்கி உள்ளனர். மற்றொரு வகை போலியானது, பேஸ்புக் சேவையை குலைப்பதற்காக தொடங்கப்பட்டது ஆகும். மற்றொரு வகையானது விருப்பமில்லாமல் பெருமைக்காக மிகைப் படுத்தப்பட்ட தகவல்களுடன் தொடங்கப்படும் கணக்கு ஆகும். அந்த வகையில் இணையதள மொத்த பயன்பாட்டாளர்களில் 1.5 சதவிகிதம் பேர் விருப்பம் இல்லாமல் பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்னர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment