கூடங்குளம் அணுஉலையை இயக்குவதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அணுஉலையின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசின் உரிய அனுமதியை பெறவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வழக்கின் விசாரணை முடிந்துள்ள நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட் நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி ஆகியோர் ஒத்தி வைத்தனர்.
இதேபோல் கூடங்குளம் தொடர்பான 10க்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணையும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையே ஆகஸ்ட் 25ம் தேதி முதல் மின் உற்பத்தி துவங்கும் என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
அணு உலை கழிவுகளை நிலத்திற்கு அடியில் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அளித்த அறிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருப்பதால், 25ம் தேதி மின்உற்பதி தொடங்கும் என செய்தி வெளியானது. ஆனால் ஒருசில பணிகள் இன்னும் முடிவடையாததால் மின்உற்பத்தி தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.

No comments:
Post a Comment