லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற பெண்களுக்கான சைக்கிள் பந்தயத்தில் 39 வயதான அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராவ் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று பெண்களுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார். இவர் 29 கி.மீ. போட்டி தூரத்தை சைக்கிளில் 37 நிமிடம் 34.82 வினாடிகளில் கடந்து, தங்கப்பதக்கம் வென்றார்.
வரும் 11ம் தேதி தனது 39வது பிறந்தநாளை கொண்டாட உள்ள கிறிஸ்டினுக்கு, 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வென்ற கிறிஸ்டின், சைக்கிள் பந்தயத்தில் இருந்து ஓய்வை அறிவி்த்தார். கடந்த 2010ம் ஆண்டு லூக்கஸ் என்ற மகனை பெற்றார்.
அதன்பிறகு இந்த ஆண்டு மீண்டும் விளையாட வந்த கிறிஸ்டின், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் சைக்கிள் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற வயது மிகுந்த பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதன்மூலம் கடந்த 1996ம் ஆண்டு ஒலிம்பிக் சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற 37 வயது 264 நாட்கள் கொண்ட பிரான்ஸ் வீராங்கனை லாங்கோ சிப்ரெலியின் சாதனையை முறியடித்தார்.
இது குறித்து கிறிஸ்டின் ஆம்ஸ்டிராங் கூறியதாவது,
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கும், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கும் என்ன வேறுபாடு என்று பலரும் என்னை கேட்டனர். ஆனால் இந்த ஒலிம்பிக் போட்டியின் பயணம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
No comments:
Post a Comment