சகோதரத்துவத்துவத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் நாளில் பெண்கள் தங்களின் உடன்பிறந்தவர்களின் கைகளில் ராக்கி கட்டி அன்பை வெளிப்படுத்துவார்கள். ஆனால் புது டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீரகம் செயலிழந்த தனது சகோதரனுக்கு தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக கொடுத்து அன்பை நிரூபித்துள்ளார்.
புது தில்லியில் வசித்து வருபவர் ஆஷா (34). இவரது சகோதரர் ஸ்ரீநிவாஸ் டாகுர்(42). இவர் பரிதாபாத் நகரில் வசித்து வருகிறார். நீண்ட காலமாக உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீநிவாஸ்க்கு சிறுநீரகங்கள் செயல் இழந்து விட்டன. உடனடியாக சிறுநீராக மாற்று அறுவைச்சிகிக்சை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீநிவாசுக்கு சிகிச்சை அளித்த ஏய்ம்ஸ் ( AIMS) மருத்துவமனை மருத்தவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து தனது சகோதரனின் உயிரைக்காக்க தனது சிறுநீரகத்தில் ஒன்றை வழங்க முன்வந்தார் ஆஷா. இதனையடுத்து சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் நாளான செவ்வாய்க்கிழமை இந்த அறுவைச்சிகிச்சை நடைபெற்றது.
ரக்ஷாபந்தன் நாளில் சகோதரர்களின் கையில் ராக்கி கயிறு கட்டி அவர்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்வது வழக்கம். ஆனால் ஆஷா தனது சகோதரரின் உயிரைக்காக்க சிறுநீரகத்தை பரிசாக அளித்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஸ்ரீனிவாஸ்க்கு ஆபரேசன் முடிந்து நலமுடன் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் 1.5 லட்சம் இந்தியர்கள் சிறுநீராக கோளாறினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் உறுப்புகளை தானம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. 5000 சிறுநீரகங்கள் மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு கிடைக்கிறது.
ஸ்பெயின் நாட்டில் ஒரு மில்லியனுக்கு 35.1 என்ற அளவில் உறுப்புகள் கிடைக்கின்றன. இங்கிலாந்தில் 27 சதவிகிதமும், அமெரிக்காவில் 26 சதவிகிதமும், கனடாவில் 14 சதவிகிதமும், ஆஸ்திரேலியாவில் 11 சதவிகிதமும் டோனர்கள் உள்ளனர். அதேசமயம் இந்தியாவில் 0.08 என்ற அளவிலேயே டோனர்கள் உள்ளனர் என்று சிறுநீரகவியல்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment