தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் நடுவீரப்பட்டைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் லட்சயா (வயது7). 2-ம் வகுப்பு மாணவி. இன்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அந்த வழியாக ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி மாணவி லட்சயா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக இறந்தாள். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். சிறுமி மீது மோதிய லாரி நிற்காமல் வேகமாக புறப்பட்டு சென்றது. ஆனாலும் அந்த லாரியை பொதுமக்கள் விரட்டி சென்று டிரைவரை பிடித்து அடித்து உதைத்தனர். சிலர் லாரிக்கு தீ வைத்தனர்.
இதனால் லாரி கொளுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு படையினர் தீயணைக்க சென்றனர். ஆனால் அவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் லாரி எரிந்து சாம்பலானது. அந்த ரோட்டின் இருபுறமும் கற்கள், மரங்களை போட்டு போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பொதுமக்களிடம் சிக்கிய டிரைவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

No comments:
Post a Comment