நாட்டில் உள்ள விளையாட்டு சம்மேளனங்கள் ஆண்டு தோறும் அங்கீகாரம் பெறும் விதிமுறையை மத்திய அரசு கடந்து 2010-ல் புதிதாக அறிமுகம் செய்தது.
அதன்படி அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்த சம்மேளனங்கள் மட்டுமே அரசின் நிதிஉதவி மற்றும் பல் வேறு சலுகைகளை பெற தகுதியுடைதாகும்.
இப்போதைய நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்த 51 விளையாட்டு சம்மேளனங்கள் மட்டுமே அரசின் அங்கீகாரத்தை பெற்று இருப்பதாகவும், ஆக்கி, கிரிக்கெட் உள்பட 10 விளையாட்டு அமைப்புகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி அஜய் மக்கான் பாராளுமன்றத்தில் எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதது, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காதது போன்ற காரணங்களால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஆண்டு ஆங்கீகாரம் வழங்கப்படவில்லை.
நிர்வாகத்தில் உள்ள மோதல்கள் மற்றும் பிரச்சினைகள் காரணமாக ஆக்கி, நெட்பால், த்ரோபால், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட சம்மேளனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment