இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் பி.எஸ்.எல்.வி. ஜி21 என்ற புதிய ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இது இந்தியாவின் 100-வது ராக்கெட் ஆகும்.
இதில் ஜப்பான், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்களும் சேர்த்து ஏவப்பட உள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இது முக்கிய மைல் கல்லாக அமையும். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. செயற்கைக்கோள் விண்ணில் செலுத்துவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த பணிகளில் விஞ்ஞானிகள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment