அரசு கேபிள் டி.வி. கழகம் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டர் முறையை எதிர்த்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், டெண்டரை திறக்க தடைவிதித்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு கேபிள் டி.வி. கழகம் சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார். அப்போது அவர் கோர்ட்டில் தெரிவித்ததாவது:-
அரசு கேபிள் டி.வி. கழக இயக்குனர்கள் கூட்டத்தில் ஏலத்தொகையை நிர்ணயம் செய்வது தொடர்பாக எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே, அரசு கேபிள் டி.வி. கழகம் தனது டெண்டரை வாபஸ் பெற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கு பைசல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கொடுத்த முன்வைப்பு தொகையை 4 வார காலத்துக்குள் திருப்பித் தரவேண்டும். அவை அளித்த டெண்டர் கவரை பிரிக்காமல் அப்படியே திருப்பி தரவேண்டும் என்று தெரிவித்தனர்.

No comments:
Post a Comment