கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் தான் புதிதாக தயாரித்துள்ள காலணிகளில் புத்தரின் படத்தை போட்டுள்ளது. இதற்கு புத்த மதத்தை பின்பற்றும் திபெத் மற்றும் பூட்டான் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஐகன் ஷூஸ் என்ற நிறுவனம் தான் புதிதாக தயாரித்துள்ள காலணிகளில் புத்த மதத்தை தோற்றுவித்த புத்தரின் படத்தை போட்டுள்ளது. இதற்கு புத்த மதத்தை பின்பற்றும் திபெத் மற்றும் பூட்டான் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்நிறுவனத்தின் பேஸ்புக் பக்கம் கண்டன செய்திகளால் நிரம்பியுள்ளது.
இது குறித்து பூசுங் செரிங் என்ற திபெத்தியர் பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது,
புத்த மத வழக்கப்படி புத்தாவின் உருவத்திற்கு மரியாதை அளிக்கப்படும். அப்படிப்பட்ட புத்தரின் உருவப்படத்தை காலணியில் வரைந்திருப்பது புத்த மதத்தை பின்பற்றுவர்களை அவமதிக்கும் செயலாகும். அதனால் உங்கள் புத்தரின் படம் உள்ள ஷூக்களை தயவு செய்து சந்தையில் இருந்து திரும்பப் பெறுங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் இது குறித்து அந்நிறுவனம் எதுவும் தெரிவிக்காமல் உள்ளது. முன்னதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு இந்து கடவுளான காளியின் பெயரை வைத்ததோடு அந்த பாட்டிலில் காளியின் படத்தையும் போட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment