சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினரும் எப்படியாவது வாக்கு அரசியலுக்கு வந்துவிட வேண்டும் என்று துடியாக துடிக்கின்றனர் போல. முதலி தனிக்கட்சி தொடங்கப் போவதாக அன்னா ஹசாரேவே அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் அதை மாற்றிக் கொண்டார். இப்பொழுது அன்னா ஹசாரே குழுவினர் சமூக வலைதளமான டிவிட்டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின்றனர்.
"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அன்னாஜி களம் இறங்க வேண்டிய தருணம் இதுதானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதள பக்கத்தில்,
- தற்போதைய அரசியல் கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னாஜி முன்னெடுக்க வேண்டுமா?
என்று இரு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.
அன்னா ஹசாரே குழுவினர் 9-வது நாளாக போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளமால் இருப்பதால் விரக்தியடைந்த நிலையில்தான் அன்னா குழுவினர் இத்தகைய பிரச்சாரத்தை முன்னெடுப்பதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment