வடகிழக்கு மாநில மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் வகையில் மாற்றம் செய்யப்பட்ட போலியான படங்கள் மற்றும் செய்திகளை வெளியிட்ட சர்ச்சைக்குரிய 28 இணையதள பக்கங்களை உடனடியாக அகற்றாவிட்டால், அதற்கான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என சமூக வலைத்தளமான ட்விட்டருக்கு, அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீங்கு விளைவிக்கும் பக்கங்களை உடனடியாக தடை செய்யாவிட்டால் ட்விட்டர் இணையதளம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் பிறப்பித்த உத்தரவின்பேரில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, ட்விட்டருக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவில் பெருமளவில் வாழும் வடகிழக்கு மாநில மக்கள் மீது, முஸ்லிம்கள் தாக்குதல் நடத்துவது போன்ற, மாற்றம் செய்யப்பட்ட படங்களை வெளியிட்ட 310 இணையதள பக்கங்களை தடை செய்யும்படி ட்விட்டருக்கு அரசு ஏற்கனவே ஆணையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment