இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரிந்த ஹர்பிரீத்சிங் மற்றும் சத்தியேந்தர் சிங். இவர்கள் இருவரும் ஜனாதிபதியின் பாதுகாவலர்களாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் டெல்லி புத்தா ஜெந்தி பூங்காவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை பட்டப்பகலில் கற்பழித்தனர். அங்கிருந்தவர்கள் மாணவியை காப்பாற்ற முயன்றனர். ஆனால், ஆஜானுபாகு தோற்றம் கொண்டிருந்த பாதுகாவலர்களிடம் இருந்து மாணவியை மீட்க முடியவில்லை.
போலீசுக்கு தகவல் கொடுத்து அவர்கள் வருவதற்குள் மாணவியை கற்பழித்து விட்டு, இருவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். மாணவி கொடுத்த புகாரின் பேரில், ஹர்பிரீத் சிங், சத்தியேந்தர் சிங் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கீழ்க்கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இருவரும் டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கன்னா, நேற்று தீர்ப்பு அளித்தார்.
அவர் அளித்த தீர்ப்பில், பட்டப்பகலில் ராணுவ சீருடையில் 17 வயது மாணவியை கற்பழித்தது கொடூரமான செயல். பாதுகாவலர்களே குற்றவாளியாக மாறியது எந்தவிதத்திலும் சமாதானம் அடைய முடியாததாகும். எனவே, இருவருக்கும் கீழ்க்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனை சரியே என்று கூறினார்.

No comments:
Post a Comment