உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள சி.பி.ஜி. மகாவித்யாலயா என்ற கல்லூரியில், மறைந்த சோசலிஸ்ட் தலைவர் ஜானேஷ்வர்மிஸ்ராவின் சிலை திறப்பு விழாவுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அங்கு பெரிய அளவில் விழா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
அங்கு பலத்த மழையும், சூறாவளி காற்றும் வீசியதால் அந்த விழா பந்தல் திடீரென சரிந்து விழுந்தது. இந்த நேரத்தில் விழாவில் கலந்து கொள்ள முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தனது வீட்டில் இருந்து வந்து கொண்டிருந்தார். அவர் சற்று தாமதமாக வந்ததால் பந்தல் சரிந்த விபத்தில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
ஆனாலும், திட்டமிட்டபடி விழா நடந்தது. அந்தக் கல்லூரியின் அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் விழா குழுவினர் ஒலிபெருக்கி அமைத்து இருந்தனர். அந்த மாடியில் ஏறி அவர் பொது மக்களிடையே பேசினார்.
No comments:
Post a Comment