அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதை சென்னையில் நடந்த விழாவில் மத்திய மந்திரி ஜி.கே. வாசன் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தேசிய தானியங்கி அடையாள அமைப்பு இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதன் மூலம் தொழில்நுட்ப துறையில் முன்னேற்றம் அடைந்த நாடுகளில் இந்தியா முன்னணி இடத்தை பிடித்துள்ளது.
கடலோர பாதுகாப்பில் இது ஒரு மைல்கல். இந்த புதிய அமைப்பு 74 கலங்கரை விளக்கங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்திய கடற்கரையோரம் செல்லும் கப்பல்களை கண்காணிக்கவும், மீன்பிடி படகுகளை கண்காணிக்கவும் உரிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கடலில் 50 கி.மீ. தூரத்துக்கு கண்காணிக்கும். கடல் வழியாக அன்னியர்கள் ஊடுருவலை கண்காணிக்கவும் பேருதவியாக இருக்கும். கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு நிறுவனங்கள் விசாகப்பட்டினத்தோடும், ஜாம்நகர், மும்பை, கொச்சி கட்டுப்பாட்டு நிலையங்கள் மும்பையுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 13 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா அருங்காட்சியகமாக மாற்றப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள மெரினா, ராமேசுரம், மகாபலிபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் ஆகிய 4 கலங்கரை விளக்கங்களும் அடங்கும்.
தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் ரூ.6 கோடி செலவில் கலங்கரை விளக்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: சென்னை துறைமுகம் - எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் சாலை விரிவாக்க பணிகள் எப்போது முடிவடையும்?
பதில்: திட்டமிட்டபடி சரியான முறையில் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் பணிகளை முடிக்கும் வகையில் துறைமுகம், அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கேள்வி: அன்னா ஹசாரே கட்சி தொடங்கப்போவது பற்றி கருத்து என்ன?
பதில்: ஜனநாயகத்தில் தனி நபர்கள் பாராளுமன்ற அதிகாரத்தை கட்டாயப்படுத்தவோ, நிர்பந்தப்படுத்தவோ முடியாது. மக்கள் அதை ஏற்கவும் மாட்டார்கள். காங்கிரஸ் ஏற்கனவே கூறியது போல் அன்னாஹசாரே அரசியல் ஆர்வமும், பதவி ஆசையும் கொண்டவர் என்பதை நிரூபித்து இருக்கிறார். யாரும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் நிற்கலாம் அது அவரவர்கள் உரிமை. காங்கிரசை எதிர்க்கும் பத்து பதினைந்து இயக்கங்களில் அன்னா ஹசாரே இயக்கமும் ஒன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலங்கரை விளக்கங்கள் துறை தலைமை இயக்குனர் சூரஜ், கப்பல் துறை செயலாளர் பிரதீப்குமார் சின்கா, தேசிய நீர் மேலாண்மை இயக்குனர் பூபேந்தர் பிரசாத், எண்ணூர் துறைமுக தலைவர் வேலுமணி, மயிலை பெரியசாமி, கலங்கரை விளக்கங்கள் துறை ஆலோசனை குழு உறுப்பினர் பிஜு சாக்கோ, அமீர்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment