ஆஸ்திரேலிய ஜூனியர் கிரிக்கெட் அணியில் இந்திய வம்சாவளி வீரர் முதல்முறையாக இடம் பெற்றுள்ளார். 19 வயதான அவரது பெயர் குரிந்தர் சந்து.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த குரிந்தர் சந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதியில் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை சாய்த்தார்.
பஞ்சாபை சேர்ந்த சந்துவின் தந்தை இக்பால் 1980ல் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். சந்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் 20 ஓவர் போட்டியில் சிட்னி தண்டர் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment