‘7 ஆம் அறிவு’, ‘3’ படங்கள் ஸ்ருதியை தமிழில் முன்னணி நடிகையாக உயர்த்தியது. இந்தியில் ‘லக்’ படம் ஓடாததால் அங்கு மார்க்கெட் இல்லை. பிரபுதேவா இயக்கும் புதிய இந்தி படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
பிரபுதேவா இந்தியில் பிரபல இயக்குனராக இருப்பதால் அவர் படத்தில் நடிப்பதன் மூலம் இந்தியில் தனது மார்க்கெட் உயரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.
இதுவரை ரூ.40 லட்சம், ரூ.60 லட்சம் என்றுதான் சம்பளம் வாங்கினார். ஆனால் தற்போது ‘பலுபு’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஸ்ருதிக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசி, ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் ரவிதேஜா ஜோடியாக நடிக்கிறார்.
கதாநாயகிகளுக்கு ரூ.1 கோடிதான் அதிகபட்ச சம்பளமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதை ஸ்ருதி எட்டிப்பிடித்துள்ளதால் ஏற்கனவே ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் வியப்பாகியுள்ளனர். நிறைய படங்களில் நடித்த பிறகே இந்த சம்பள நிலையை தொட முடியும். ஆனால் ஸ்ருதி குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். சில படங்களே ஹிட்டாகி உள்ளன. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது..
No comments:
Post a Comment