கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு முறிந்தது. மேலும் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுக்கு, மற்ற நாட்டு கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயங்கின.
இந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இலங்கை அணி. அப்போது லாகூரில் சொகுசு பஸ்சில் பயணித்த இலங்கை அணியினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்களுக்கு பாதுகாப்பிற்கு சென்றவர்களில் 8 பேர் பலியாகினர். மேலும் வீரர்களில் சிலர் காயத்துடன் உயர் தப்பினர். இலங்கை அணியின் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை, பாகிஸ்தான் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் லாகூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள முல்தான் என்ற பகுதியில் உள்ள காஸி கட் பாலம் அருகே பாதுகாப்பு படையினர் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பேருந்தில் இருந்து ஒரு பயணி தப்பியோட முயன்றார். அதையடுத்து போலீசார் அந்த நபரை நோக்கி சுட்டனர்.
அந்த நபரும் திரும்ப போலீசாரை நோக்கி சுட்டனார். முடிவில் போலீசாரின் குண்டு பட்டு, அப்துல் கப்பர் குவஸ்ரனி அலிஸ் சாய்புல்லா என்ற அந்த நபர் கொல்லப்பட்டார். அவரது உடைமைகளை பரிசோதித்த போது, 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் சுட்டு கொல்லப்பட்ட சாய்புல்லா, தேரிக்-இ-தலிபான் என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஆவார். ஆப்கானிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ற அவர், தீவிரவாத அமைப்புகளுக்காக வங்கிகளில் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரி கோஹர் நபீஸ் கூறியதாவது,
சாய்புல்லா சுட்டு கொல்லப்பட்டதால், முல்டானில் நடைபெற அவர் மூலம் நடைபெற இருந்த பெரிய தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது. லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், சாய்புல்லா தேடப்பட்ட குற்றவாளி ஆவார் என்றார்.
No comments:
Post a Comment