ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜியின் மகள் சவுந்தர்யா இயக்குகிறார். இப்படம் ரஜியின் பிறந்த நாளான 12.12.12 அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோச்சடையான் படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதுபோல் படத்தின் சிறப்பு காட்சியையும் டிசம்பர் மாதம் அங்கு திரையிடுகிறார்கள்.
இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ரஜினியும், தீபிகா படுகோனேவும் டோக்கியோ செல்ல உள்ளனர். அப்போது ஜப்பானிய ரசிகர்களை ரஜினி சந்தித்து பேச உள்ளார். இதற்காக ரஜினி தற்போது ஜப்பான் மொழி கற்று வருகிறார். ஆசிரியரை வைத்து அந்த மொழியை கற்கிறார்.
ரஜினிக்கு ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும். இப்போது கூடுதலாக ஜப்பான் மொழியும் கற்கிறார். முத்து படம் ஜப்பானில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். ரசிகர் மன்றமும் அங்கு தொடங்கப்பட்டு உள்ளது.
ஜப்பானில் ரஜினியின் பல படங்கள் ஜப்பானிய மொழி சப்டைட்டிலுடன் திரையிடப்பட்டும் வருகின்றன. சுனாமி தாக்கி பேரழிவு ஏற்பட்டபோது ஜப்பானுக்கு செல்ல ரஜினி விரும்பினார். ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை. இப்போது கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழாவிலும், பிரிமியர் காட்சியிலும் பங்கேற்க ஜப்பான் செல்கிறார். ரஜினி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். விமான பயணத்தை அவர் உடல் நிலை ஏற்குமா? என டாக்டர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.
டாக்டர்கள் பிரச்சினை இல்லை. பயணம் செய்யலாம் என்று அவர்கள் பச்சைக்கொடி காட்டி விட்டார்களாம். டோக்கியோவில் ஜப்பான் மொழியிலேயே ரசிகர்களிடம் ரஜினி பேச உள்ளார்.
No comments:
Post a Comment