அதிரடி புகார் கேள்விப்பட்டிருப்பீர்கள்... அதென்ன அடிதடி புகார்? நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியின் மூத்த மகள் வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் மீதுதான் இந்த அடிதடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார் கொடுத்திருப்பவர் தற்போது தனது இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வரும் நடிகை வனிதா. தனக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை உரிமை கொண்டாடுவதில் கடந்த சில மாதங்களாக வனிதா - ஆகாஷ் இடையே மோதல் இருந்து வருகிறது. இருவரும் தங்களிடம்தான் மகன் வளர வேண்டும் என்று போலீஸ் நிலையம், கோர்ட் படியேறி வாதிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில் வார நாட்களில் ஆகாசுடனும், வார இறுதி நாட்களில் வனிதாவுடனும் விஜய்ஸ்ரீஹரி வசிக்க வேண்டும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை ஆகாஷ் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வனிதா வந்தார். ஐகோர்ட்டின் உத்தரவை ஆகாஷ் மதிக்கவில்லை என்றும், மகனை தன்னுடன் அனுப்ப கேட்டபோது தன்னை ஆகாஷ் அடித்து உதைத்ததாகவும் போலீஸ் நிலையத்தில் வனிதா புகார் கொடுத்தார். இதுபற்றி ஆகாசிடம் கேட்டபோது, வீட்டுக்கு வெளியே விஜய்ஸ்ரீஹரி கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தபோது திடீரென்று அவனை வனிதா பிடித்து இழுத்து தன்னுடன் செல்ல வேண்டும் என்று அழைத்தார். ஆனால் அவன் கூச்சல் போட்டு அதற்கு மறுத்தான். ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்ற நான் தயாராக இருக்கிறேன். ஆனால் தந்தை என்ற நிலையில் வேறொருவர் இருப்பதை விஜய்ஸ்ரீஹரி ஏற்கவில்லை. அதனால் வனிதாவுடன் செல்வதை அவன் கடுமையாக எதிர்க்கிறான். நான் வனிதாவை அடிக்கவில்லை என்று மறுத்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இன்றைய பதிவுகள்...
- எங்களை தாக்கினால் எம்.ஜி.ஆர்.,விஜயகாந்த்,விஜய், ...
- தமிழகம் கண்டிராத புதுமைகள் நடக்கும்- குதிரைப் பேரங...
- விஜயகாந்திற்கு தோற்கடிக்க நட்சத்திரபேச்சாளர்களை கள...
- சினிமாக்காரர்களை வெறுக்கும் ராமதாஸ் கமல், ரஜினியை ...
- காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளர் திடீர் மாயம்: மன...
- 100-வது சதத்துக்காக தெண்டுல்கர் காத்திருக்க வேண்டு...
- வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் :நடிகர்...
- தேர்தலுக்கு பின் கூட்டணிகள் மாறும்: மதுரையில் சுப்...
- ஆர்யா தம்பியின் ‘காதல் டூ கல்யாணம்'
- முன்னாள் கதாநாயகன் ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் உட்க...
No comments:
Post a Comment