இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. தமிழில் ரஜினி ஜோடியாக ராணா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தீபிகாபடுகோனேவை விருந்து நிகழ்ச்சியொன்றில் ஆட ரூ.4 கோடி பேசி ஆட அழைத்துள்ளனர். அவர் மறுத்து விட்டார். இதுகுறித்து தீபிகா படுகோனே கூறியதாவது:-
நடிகைகள் பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று எதிர்பார்க்ககூடாது. லண்டனில் கோடீஸ்வரர் ஒருவர் வீட்டில் விருந்து நிகழ்ச்சியொன்றில் என்னை ஆட அழைத்தனர். அதற்கு ரூ.4 கோடி தருவதாக கூறினார்கள். தம்மரே தம் என்ற ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினால் போதும் என்றனர். நான் தமாஷ் செய்கிறார்கள் என்று நினைத்தேன்.
அதன்பிறகு கடிதம் அனுப்பியும் வற்புறுத்தினார்கள். ஒரு பாட்டுக்கு ஆட ரூ.4 கோடி தருவார்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பிறகு நான் அந்த அழைப்பை நிராகரித்து விட்டேன். சினிமாதான் எனக்கு முக்கியம். அதில்தான் ஆடுவேன். பணத்துக்காக வீட்டு விருந்துக்கெல்லாம் ஆடமாட்டேன் என்று மறுத்து விட்டேன் என்றார்.

No comments:
Post a Comment