சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகவிருக்கும் போராளி பட வேலைகளை படு ஜரூராக ஆரம்பித்துவிட்டார்கள். ஈசன் படத்தின் படுதோல்விக்கு பின், இழந்த ஒளியை மீண்டும் அடைய வேண்டும் என்ற வெறியோடு செயல்பட்டு வருகிறார் சசிகுமார். சமுத்திரக்கனியின் 'போராளி' இவர்தான்!
இத்தனை நாட்கள் பொறுமையாக கதையை மெருகேற்றிய இருவரும், இப்போது படத்திற்கு பொருத்தமான ஸ்டார்களை பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் இப்படத்தில் நடிக்க அஞ்சலிக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்கள். பிறகு இவருக்கும் டைரக்டர் சமுத்திரக்கனிக்கும் இடையே ஏற்பட்ட கசமுசாவால் அப்படத்திலிருந்தே அஞ்சலி விலகி விட்டார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை த்ரிஷாவை அழைத்தார்களாம். புலி பசித்தாலும் ஃபுல் மீல்சை நாடாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் அவர். அஜீத், விஜய், விக்ரம், சூர்யாவுக்கு அடுத்த லெவல் ஆர்ட்டிஸ்டுகளை அவர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சசி விஷயத்திலும் அதே கொள்கையை கடைபிடித்தாராம்.

No comments:
Post a Comment