ராமநாதபுரத்தைச் சேர்ந்த விக்டர், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய 4 மீனவர்கள் கடந்த 2ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் குறிப்பிட்ட நாளில் கரை திரும் பாததால் குடும்பத்தினர் தவித்தனர்.
இந் நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பூங்கடி தீவு கடற்கரையில் விக்டரின் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை யாழ்ப்பாணம் மருத்துவமனையிலேயே பிரேதப் பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்து விட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிப் பட்டணம் கடற்கரையில் அந்தோணிராஜ், ஜான்பால் ஆகியோரது உடல்கள் கரை ஒதுங்கின.
இதில் ஜான் பாலின் இடது கை துண்டிக்கப்பட்டு இருந்தது. தலையில் குண்டு காயங்கள் இருந்தன. அவரை இலங்கைக் கடற்படை சுட்டுக்கொன்று இருக்கலாம் என்று புகார் கூறப்பட்டது.
இதேபோல் யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்யப்பட்ட விக்டர் உடலிலும் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை போன்று கடலில் வயிற்று பிழைப்புக்காக மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை ராணுவம் 'காக்காய்' 'குருவி'களை சுட்டு கொல்வதை போன்று சுட்டு கொல்வது நாம் அறிந்ததே!
இவ்வாறு இலங்கை அரசு தமிழக மீனவர்களை சுட்டு கொல்லும் போது அதை கண்டும் காணாமல் இருப்பதும் . என்றாவது ஒரு நாள் இருக்கும் தமிழனில் சில பேர்க்கு ரோசம் வந்து போராட்டத்தில் குதிக்கும் போது இலங்கையின் கொடூரத்தனத்துக்கு ஆதராவாக பேசுவதும் மத்திய அரசுக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.
இந்நிலையில் இலங்கை அரசை கண்டித்து சென்னையில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு நாளை காலை 10 மணிக்கு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக தற்போது இருந்து வரும் தங்காபாலு இவ்வாறு அறிவித்து இருப்பது நம்ப முடியாததாகவே உள்ளது. தனது கட்சியில் தனக்கு எதிராக கிளம்பியிருக்கும் எதிர்ப்பலையை சமாளிக்கவும் மக்களையும் கட்சி தொண்டர்களையும் திசை திருப்புவதற்காகவும் தான் தங்கபாலு திட்டமிட்டு இந்த போராட்ட அறிவிப்பை அறிவித்திருப்பதாக தான் எண்ண தோன்றுகிறது.
தமிழனின் உயிர் காங்கிரஸ் கட்சிக்கு எதற்கெல்லாம் பயன்படுகிறது பாருங்கள்...!!!
இன்றைய செய்திகள்...
- அவன் இவனை அபகரித்த சன் டிவி!
- "49 ஓ'வுக்கு நல்ல வரவேற்பு
- ஹீரோயின் ஓகே..! ஹீரோ நோ நோ..!
- ஐ.நா. சபை சில நாடுகளின் பகடை காயாக மாறிவிட்டது :இல...
- கவர்ச்சியில் இருந்து காமெடிக்கு....
- மறுபடியும் வருவேன் - தமன்னா உருக்கம்
- கொலைமிரட்டல் எதிரொலி அதிமுக வேட்பாளருக்கு துப்பாக்...
- திருவள்ளூர் அருகே பாமகவினரை தாக்கிய திமுகவினர்
- மீன்பிடிக்க தடை: 45 நாட்கள் மீனவர்கள் படும் பாடு-வ...
- மீனவர்களைக் கொன்ற இலங்கையின் மீது இந்தியா போர் தொட...
- தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்-ஜெய...
- பணம் பட்டுவாடா-மதுரை மேற்கு தொகுதிக்கு மறு தேர்தல்...
- தேர்தலில் இதுவரை இல்லாத அளவு வாக்குப்பதிவு ஏன்?
- மின்சார நாற்காலி தண்டனையையும் மகிழ்சியாக ஏற்றுக்...
- சீமான் கனவை நிறைவேற்ற முயற்சிக்கிறார் தங்கபாலு : ...
- ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார் : எஸ்.வி.சேக...
- இலங்கையில் மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி
- இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள்... ஐ.நா. நிபு...
- எம்.எல்.ஏ., விலை ரூ.50 கோடி: குதிரை பேரத்திற்கு தி...

No comments:
Post a Comment