நகை திருட்டு வழக்கில் 4 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹன் 75000 டாலர் செலுத்தி பெயிலில் ரிலீசானார்.
நடிகை லிண்ட்சே லோஹன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றார். அங்கு அவர் ஒரு நெக்லஸை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு பணம் கொடுக்காமல் அங்கு இருந்து வெளியேறிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை நடிகை லிண்ட்சே மறுத்தார். "ஞாபக மறதி காரணமாக அவர் கவனக்குறைவாக அந்த நகையுடன் பணம் கொடுக்காமல் கடையை விட்டு வெளியேறி விட்டார். திட்டமிட்டு அவர் பணம் கொடுக்காமல் செல்லவில்லை'' என்று அவரது வக்கீல் வாதாடினார்.
"மேலும் பணம் கொடுக்காமல் அவர் நகையுடன் வெளியேறி விட்டதாக செய்தி வெளியானதும் அவர் நகையை திரும்பக் கொடுத்து விட்டார்'' என்றும் வக்கீல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கை வருகிற ஜுன் மாதம் 3-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீனும் அளித்தார்.
கடந்த 2007-ம் ஆண்டு குடிபோதையில் கார் ஓட்டியதற்காக விதிக்கப்பட்ட நன்னடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக அவருக்கு 4 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக் காலத்தில் பரோலில் வந்த போதுதான் நகைத் திருட்டு குற்றத்தில் மாட்டிக் கொண்டார்.

No comments:
Post a Comment