இதைதான் கெரகம்னு சொல்வாங்க பொத்தாம் பொதுவாக! ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்த கட்ட ஹீரோக்கள் படங்களுக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறார் அனன்யா. என்னவாம்?
ஹீரோ விஜய்யுடன் இணைந்து நடிக்க வந்த வாய்ப்பு ஒன்றை வலுக்கட்டாயமாக வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் அனன்யா. முதலில் கதை, அப்புறம் ஹீரோ, அப்புறமாக எந்த கம்பெனி. இது மூன்றையும் பார்த்துதான் படத்தையே ஒப்புக் கொள்வார்கள் ஓரளவுக்கு பெயர் வாங்கிய நடிகைகள். இதை அப்படியே ரிவர்சில் பார்க்கிற நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனால் அனன்யா வேறு டைப்.
கதை சொல்ல யார் போனாலும், கவர்ச்சியா நடிக்க மாட்டேன். ஓகேன்னா கதை சொல்லுங்க என்ற கண்டிஷனோடுதான் உள்ளேயே அனுமதிக்கிறார் அவர்களை. விஜய் படத்தில் நடிக்க அழைப்பு என்றதும் அனன்யாவே வேண்டாம் என்று கூறிவிட்டதாக தகவல். ஏன்?
விஜய் சாருடன் நடிக்கும் ஹீரோயின்கள் பாடல் காட்சியிலாவது கவர்ச்சியாக ஆட வேண்டும். என்னால் பாடல் காட்சியில் கூட அப்படி தோன்ற முடியாது. பெரிய ஹீரோ என்று ஆசைப்பட்டு கமிட் ஆனபின் முடியாது என்று ஷ§ட்டிங் ஸ்பாட்டில் போய் டென்ஷன் ஏற்படுத்தக் கூடாதல்லவா? என் கொள்கைக்கு யாருடன் நடிக்க வாய்ப்பு வருகிறதோ, அதுவே போதும் என்றாராம்.

No comments:
Post a Comment