நடிகர் எஸ்.வி. சேகர் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து நான் கவலைப்படவில்லை. தேர்தலுக்கு பின் நிச்சயம் தங்கபாலு கவலை படுவார்.
ஒரு கட்சி தலைவர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாராணம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுதான். என்றுமே சூழ்ச்சி வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.தங்கபாலுவுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு உள்ளது.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கு அவர் நிற்கலாம். சினிமா இயக்குனர் சீமான் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிப்போம் என்கிறார். அவருக்கு தி.மு.க. வேட்பாளர்களையோ, பா.ம.க. வேட்பாளர் களையோ தோற்கடிப்போம் என்று கூற தைரியம் உள்ளதாப இதே சீமான் கடந்த சில ஆண்டுகளுக்கு தம்பி என்ற சினிமாவை எடுத்தார்.
அதில் நடித்தது சிங்கள பெண் பூஜா. அப்போது சீமானுக்கு தமிழன் என்ற உணர்வு எங்கே போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment