நயன்தாராவைத் திருமணம் செய்வதற்காகவே மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்யும் நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா, அதற்கு நஷ்டஈடாக தனது ஏராளமான சொத்துக்களை ரம்லத்துக்கு எழுதிக் கொடுத்தார்.
நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இவர்கள் திருமணத்தை முதல் மனைவி ரம்லத் எதிர்த்ததால் அவரை விவாகரத்து செய்கிறார் பிரபுதேவா. முதலில் விவாகரத்துக்கு ரம்லத் சம்மதிக்கவில்லை.
இதையடுத்து பல லட்சங்கள் ரொக்கமாகவும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அவர் பெயரில் மாற்றி எழுதி தரவும் பிரபுதேவா முன்வந்தார். இதையடுத்து ரம்லத்தும் அவரை விட்டு விலக முடிவு செய்தார்.
இருவரும் மனப்பூர்வமாக பிரிவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் 3 மாதங்களுக்கு முன் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். வருகிற ஜூன் மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது இருவருக்கும் விவாகரத்து கிடைத்துவிடும்.
ரம்லத்துக்கு சொத்துக்கள் தர உறுதி அளித்தபடி அவர் பெயரில் அவற்றை மாற்றி எழுதி பத்திரப் பதிவு செய்து வருகிறார். முதல் கட்டமாக ரூ.5 லட்சத்தை ரம்லத்திடம் வழங்கியுள்ளார். மேலும் 5 லட்சம் ரூபாயை விவாகரத்து கிடைத்ததும் வழங்குவதாகக் கூறியுள்ளார்.
கிழக்கு கடற்கரையில் உள்ள 22 சென்ட் நிலத்தை ரம்லத், மற்றும் குழந்தைகள் பெயரில் மாற்றி எழுதிக் கொடுத்துள்ளார். அதில் தன்னையும் பங்குதாரராக சேர்த்து உள்ளார். அடுத்து அண்ணா நகரில் உள்ள வீட்டை ரம்லத் பெயரில் மாற்றி பத்திரப் பதிவு செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள வீடுகளை குழந்தைகள் பெயருக்கு மாற்றி எழுதுகிறார். இவற்றுக்கான பத்திரப் பதிவுகள் அடுத்தவாரம் முடிந்து விடும் என கூறப்படுகிறது. அதன் பிறகு சொத்துக்கள் மாற்றி எழுதப்பட்ட விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
விவாகரத்து கிடைத்ததும் ஜூலை மாதம் நயன்தாரா, பிரவுதேவா திருமணம் மும்பையில் நடக்கிறது.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கமாட்டார் நயன்தாரா என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment