நார்வேயில் நடைபெறும் தமிழ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இயக்குனர் பட்டாளமே புறப்பட்டுச் சென்றுள்ளது. நார்வேயில் உள்ள ஓஸ்லோவில் ஏப்ரல் 20 முதல் 25ம்தேதி வரை தமிழ் திரைப்பட விழா மற்றும் தமிழர் விருது 2011 விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து டைரக்டர்கள் வெற்றிமாறன் (பொல்லாதவன், ஆடுகளம்), ராதாமோகன் (மொழி, அபியும் நானும், பயணம்), பிரபு சாலமன் (மைனா), சீனு ராமசாமி (கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று), இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர்கள் நசீர் (களவாணி), ராஜேஷ் (தா), நடிகர் ஹரிஷ் (தா) உள்ளிட்ட ஒரு பட்டாளமே புறப்பட்டுச் சென்றுள்ளது. மிகப் பெரிய அளவில் நடைபெறும் இத்திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இப்படியொரு இயக்குனர் பட்டாளம் சென்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.

No comments:
Post a Comment