ஓட்டு எண்ணும் மையங்களில் அடியாட்கள் நுழைய வாய்ப்பு இருப்பதாகவும், இதனை தடுத்து சட்ட , ஒழுங்கை பராமரிக்க துணை ராணுவ படையினரின் பாதுகாப்பு அளிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., அச்சம் தெரிவித்து தேர்தல் கமிஷனுக்குக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த 13 ம் தேதி முடிந்த சட்டசபை தேர்தல் ஓட்டு மின்னணு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்தாலும் தி.மு.க.,வினர் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களை தாக்கி வருவதால் தேர்தல் கமிஷன் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் மற்றொரு கடிதத்தை மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு ஜெ., கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஓட்டு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படை பாதுகாப்பு ரோந்து பணிக்கு உத்தரவிடப்பட வேண்டும். ஓட்டு எண்ணும் நாளில் ஓட்டு மையங்களில் அடியாட்கள் யாரும் நுழைய விடாமல் தடுக்க அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். வரும் 13 ம் தேதி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்திட ஆவன செய்ய வேண்டும்.
ஓட்டு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் ஓட்டுக்கள் எண்ணப்படுவதோடு, ஒவ்வொரு சுற்றும் முடிந்த பின்னர் கண்டிப்பாக விவரத்தை அறிவித்து விட வேண்டும். அத்துடன் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். ஓட்டுப்பதிவு துவங்கி முடிவுகள் வெளியாகும் வரை துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட வேண்டுமம். மாநிலம் முழுவதும் அந்நாளில் சட்டம் ஒழுங்கை பராமரித்திட தேர்தல் கமிஷனுக்குத்தான் முழுப்பொறுப்பு உண்டு. இது தொடர்பான விஷயங்களை கமிஷன் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாடகர் - பாடலாசிரியர்களை கவுரவித்த வசனகர்த்தா!
- படத்தை போட்ட சோப் கம்பெனியிடம் ரூ.1 கோடி கேட்கிறார...
- தேர்தலில் பணம் வினியோகித்ததால் வாக்காளர் பட்டியலில...
- பொன்னர் சங்கர் ரீ-சூட்டிங்!
- நார்வே சென்ற இயக்குனர் பட்டாளம்!
- ஓட்டு எண்ணும் மையங்களில் அடியாட்கள் நுழைய வாய்ப்பு...
- ஜெ. புதிய மனு : நாளை விசாரணை
- நண்பனால் பகைவன் ஆகும் ஹீரோக்கள்
- மும்பை கடல் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கப்...
- குவாட்டர் அடிச்சு அடிச்சு இப்ப 'நைன்ட்டி' இல்லாம த...
- விஜய் கல்லெறி படாமல் தப்பியது எப்படி ?
- மே 13-ல் ஓட்டு எண்ணிக்கை: 17-ந்தேதி காலை 9.30 மணிக...
- பேரணியா? இலங்கைக்கு ஐநா எச்சரிக்கை!
- பணம் வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை சசிகலா தேர...
- தங்கபாலு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது சோனியாவின் வ...
- ஜூனில் விவாகரத்து... சொத்துக்களை ரம்லத்துக்கு எழுத...
- 'விஜய்' வீடு மீது தாக்குதல்!!
- மே 13 தேர்தல் முடிவு...மே 14 ப்ளஸ் டூ தேர்வு முடிவ...
- தமிழக சட்டசபை தேர்தல் நாள் ஜாதகம் : எப்படியெல்லாம்...
- இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தம...
- கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் சுற்றும் பிரபல...
- ஹசாரேவை விமர்சிப்பதா? ராகுலுக்கு மோடி கண்டனம்
- ரிஷிவந்தியம் தொகுதியில் அதிகளவில் பெண்கள் ஓட்டளித்...
- தலைவர்கள் சிலையை மறைத்து கட்டப்பட்ட துணிகள் அகற்ற...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...

No comments:
Post a Comment