தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிற சித்தார்த், தமிழை பொறுத்தவரை ரிசர்வ் பேங்க்கால் அறிவிக்கப்பட்ட 25 காசு என்று வைத்துக் கொள்ளுங்களேன்! (செல்லாது என்று சமீபத்தில்தான் அறிவித்தார்கள்) அந்த கோபத்தில்தான் தமிழில் நல்ல இயக்குனர்களே இல்லை என்கிற அர்த்தத்தில் பேசுகிறார் போலும். இவரை சந்தித்து கதை சொன்ன எந்த ஒரு இயக்குனரும் உருப்படியான கதைகளை சொல்லவில்லையாம். நான் நிராகரித்த கதைகள் எதுவுமே இங்கு ஓடவில்லை என்று மார்தட்டி சவால் விட்டார் அவர்.
சமீபத்தில் சென்னை வந்த அவரிடம், 'எந்த கேள்வி வேணும்னாலும் கேட்கலாம். ஆனால் ஸ்ருதிக்கும் உங்களுக்கும் லவ்வாமேன்னு மட்டும் கேட்க வேண்டாம்' என்று நிருபர்களுக்கு ரகசிய வேண்டுகோள் வைக்கப்பட்டது. இது சித்தார்த்தின் விருப்பத்தின் பேரிலேயே வைக்கப்பட்ட வேண்டுகோள்தான்.
பிரஸ்மீட்டில் இந்த கேள்வியை எழுப்பாத நிருபர்களில் சிலர் தனியாக அவரை மடக்கி இந்த கேள்வியை கேட்க, முகமெல்லாம் சிவந்தது அவருக்கு. நோ கமென்ட்ஸ் என்று கூறிவிட்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார்.
No comments:
Post a Comment