கொலைமிரட்டல் எதிரொலியாக அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் நேற்று எஸ்பி மோகனிடம் புகார் மனு கொடுத்திருந்தார். அதில் அவர்,
’’அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளரான என்னை, சிலர் கொலை செய்யப்போவதால் செல்போனில் மிரட்டி வருகின்றனர். எனவே போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து வேட்பாளர் செந்தில்நாதனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
தற்போது செந்தில்நாதன் வெளியூர் சென்றுள்ளதால், அவர் வந்தவுடன் கரூர் ரெட்டிப்பாளையத்தில் உள்ள அவர 1397776754 வீட்டில் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது’’ என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment