தமன்னா நடித்து இறுதியாக வந்த திரைப்படம் சிறுத்தை. இதனை அடுத்து ஹரியின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வேங்கை படத்தில் நடித்து வருகிறார். இது தவிர அவர் தமிழ் படங்களில் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள தமன்னா " வேங்கை திரைப்படம் இப்பொழுது தான் ஆரம்பித்த படம் போல் இருந்தது. அதற்குள் கிட்டத்தட்ட முழு படமும் முடிவடைந்து விட்டது. ஒரே ஒரு பாடல் மட்டும் தான் பாக்கி. அதனை மூணாறு பகுதியில் படமாக்கி வருகிறோம்.
இயக்குனர் ஹரி மிகவும் வேகமாக இயக்க கூடியவர், படப்பிடிப்பு போவதற்கு முன்பே எல்லாவற்றையும் திட்டமிட்டு வேலை செய்கிறார். தமிழில் இப்போதைக்கு வேறு படங்கள் எதிலும் நான் ஒப்பந்தம் செய்யவில்லை.
தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறேன். இன்னும் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளேன்.ஆகையால் நான் தமிழில் வரும் படங்களையும் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை.
தெலுங்கு படங்கள் அனைத்தும் முடிந்தவுடன் தமிழுக்கு மீண்டும் வருவேன்" என்று கூறியுள்ளார்.
தமன்னா ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வருத்தம் தான் போல!

No comments:
Post a Comment