யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, இயக்குனர்களின் நாயகன் தனுஷ் ஆகிய இருவரின் படங்களும் ஏப்ரல் எட்டாம் தேதியன்று ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள். இப்போது சன் டிவி நிர்வாகம் சிம்புவிடமும் அவரது தயாரிப்பாளரிடமும் கேட்டுக்கொண்டதால் வானம் படத்தை ஏப்ரல் 22ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துவிட்டார்கள். சிம்பு சன் டிவியுடன் இணக்கமாக இருந்துவருவதாலும், சன் டிவியின் ஆதரவு தேவை என்று அவர் நினைப்பதாலும் இதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டு பின்வாங்கிவிட்டாராம்.
இதனால் ஏப்ரல் 8ஆம் தேதி தனுஷின் மாப்பிள்ளை மட்டுமே திரைக்கு வர இருக்கிறது. இதே தினத்தில் வெளிவரப் போகிறது கருணாநிதி கதை, வசனத்தில் தயாராகியிருக்கும் பொன்னர் சங்கர். இப்படங்கள் வெளிவருவதற்கு ஒரு வாரம் முன்பு இராம.நாராயணன் தயாரித்திருக்கும் நஞ்சுபுரம் வெளிவரப் போகிறதாம். இதனால் வானம் படத்துக்கு பெரிய தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் என்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். இது தவிர இன்னும் வானம் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளும் முடிந்தபாடில்லை என்கிறார்கள்.
வானம் படம் தள்ளிப்போவதைத் தன் ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி, சன் டிவியைப் பகைத்துக்கொள்ள முடியாது, இதற்கு பதிலாக என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் என்றாராம் சிம்பு தயாரிப்பாளரிடம்.
No comments:
Post a Comment