தெய்வத்திருமகன் படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடித்து இருக்கிறாராம் அனுஷ்கா.
மாதவனுடன் இணைந்து 'ரெண்டு' படத்தில் தமிழில் அறிமுகமானார் அனுஷ்கா. அதனை அடுத்து தெலுங்கு திரையுலகில் முழு கவனம் செலுத்தி வந்தார். தமிழ் திரையுலகில் இருந்து வந்த வாய்ப்புகள் அனைத்திற்கும் தன்னிடம் கால்ஷீட் இல்லை என்ற ஒரே பதிலை சொல்லி வந்தார்.
விஜய்க்கு ஜோடி என்றவுடன் 'வேட்டைக்காரன்' படத்தில் நடித்தார். அதனை அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக 'சிங்கம்' படத்தில் நடித்தார். இப்பொழுது சிம்புவுடன் 'வானம்' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகன்' படத்திலும் நடித்து வருகிறார்.
தெலுங்கில் 'வேதம்' படத்தில் பாலியல் தொழிலாளி பாத்திரத்தில் நடித்த அனுஷ்கா, அதன் ரீமேக்கான 'வானம்' படத்திலும் அதே பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
கவர்ச்சி கதாநாயகியாக திரையில் வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா, முதன் முறையாக 'தெய்வத்திருமகன்' படத்தில் காமெடியில் கலக்கி இருப்பதாக கூறுகிறது தெய்வத்திருமகன் படக்குழு.
அனுஷ்கா மற்றும் சந்தானம் ஆகியோரது காமெடி இப்படத்தில் பெரிய பலமாக இருக்குமாம். கவர்ச்சி நாயகி காமெடியில் ஜெயிப்பாரா என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்.

No comments:
Post a Comment