தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சந்தீப், ஜெ., தரப்பில் வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், சரவணகுமார், பகவான், சுப்பையா, வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராயினர்.
இந்த வழக்கில், 179 சாட்சிகளின் வாக்குமூலங்களில் எதிர் தரப்பு (ஜெ.,) தவறுகளை சுட்டிக்காட்டியது. இதை அரசு மொழி பெயர்ப்பாளர் சரி பார்த்து கொடுத்துள்ளார்.
மொழி பெயர்ப்பில் தவறுகளை சுட்டி காட்டிய இடங்களை நீதிமன்ற அலுவலர்கள் சிகப்பு மை வைத்து அடையாளம் காண்பிக்க வேண்டும்.
அதற்கு ஜந்து நாள் தேவை என அலுவலர்கள் கூறினர். இந்த வழக்கு ஏப்ரல் 26 க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த வேளையில், ஜெ., தரப்பில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், தனி நீதி மன்றத்தில் நடந்து வரும் வழக்கில், மொழி பெயர்ப்பில் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்ட இடங்களை ஒரிஜினல் தஸ்தாவேஜூகளில் அதே இடத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நாளை விசாரிக்கப்படும் என்று நீதிபதி கேசவ நாராயணன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment