பாலிவுட்டில் தனக்கு எதிரிகளே கிடையாது என்று இளம் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் மற்றும் பெரிய நடிகைகள் ஒருவரை ஒருவார் தாக்கிப் பேசுவதும், பொது விழாக்களில் முகத்தை திருப்பிக் கொண்டு செல்வதும் சகஜமானது. சோனாக்ஷி சின்ஹாவுடனும், தீபிகாவுடன் ஏதாவது தகராறா என்று கேட்டதற்கு அப்படி ஒன்றும் கிடையாது அது எல்லாம் மீடியாக்களின் கற்பனை என்றார்.
இது குறி்த்து அனில் கபூர் மகள் சோனம் கபூர்(25) கூறியதாவது,
இந்த உலகத்தில் அனைவருக்கும் இடம் உண்டு. நாம் இங்கு கொஞ்ச காலம் தங்கி நம்மால் இயன்றதைச் செய்கிறோம். இதில் சண்டை எதற்கு? பாலிவுட்டில் எனக்கு எதிரிகள் இல்லை. அதனால் என்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் அர்த்தம் இல்லை என்றார்.
சோனம் நடித்த முதல் படமான சாவரியாவும், தீபிகாவின் முதல் படம் ஓம் சாந்தி ஓமும் ஒரே நாளில் தான் வெளியாகின.

No comments:
Post a Comment