முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கரூர் வருகை புரிந்தார்.
அவர் செய்தியாளர்களிடம் தங்கபாலு நடவடிக்கை குறித்து கூறினார்.
’’தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் என்று கூறும் தங்கபாலு 19 காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை. அது செல்லாது. காரணம் இவர் நீக்கியதில் பெரும்பாலும் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளனர். இவர்களை நீக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தான் அதிகாரம் உண்டு.
மேலும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு ஒட்டு வாங்கி வெற்றி பெற்றவர்கள். இவர்களை நீக்கும் அதிகாரம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு.
எனவே இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் தங்கபாலுவிற்கு இல்லை. காந்திய வழியில் போராடும் கட்சி நிர்வாகிகளுக்கு எனது ஆதரவு உண்டு.
தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்று ஒட்டு மொத்த காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர்.
வழக்கமாக எல்லா கட்சியிலும் தொண்டர்களை கட்சி தலைவர்கள் ஏமாற்றுவார்கள். ஆனால் தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார். அந்த விவகாரத்தில் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’என்று கூறினார்.

No comments:
Post a Comment