தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னரும் நமது கூட்டணிக் கட்சியினரை தொடர்ந்து தி.மு.கவினர் தாக்கி வருகிறார்கள். குறிப்பாக பல இடங்களில் தே.மு.தி.கவைச் சேர்ந்த இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு, ஜெயபால், அவரது மனைவி பிரசன்ன குமாரி, தம்பி சுகந்தராஜ் ஆகியோர் தி.மு.கவைச் சேர்ந்தவர்களால் அரிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கரத் தாக்குதலில் ஜெயபால் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். வேடசந்தூர் தொகுதியில் உள்ள சேவுகவுண்டச்சிபட்டியில் தே.மு.தி.க. வினரை தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வன்முறையாளர்கள் தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் நன்மங்கலம் பகுதியில் தே.மு.தி.க. கிளைச் செயலாளர் வசந்தவேலு வீட்டை தாக்கியதோடு மட்டுமல்லாமல், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் தே.மு.தி.க. நெசவாளர் அணி செயலாளராக செயல்பட்டு வந்த அசோகன் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும், அவரது இரண்டு பிள்ளைகளுக்கு படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளேன்.
காரைக்கால் தெற்கு தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட அசனா சொந்த வீட்டிலிருந்த போது தி.மு.க.வைச் சேர்ந்த கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட தோழர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், தாக்கியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்து வழக்கு தொடுக்கவும், மேற்கொண்டும் கொலை வெறித்தாண்டவம் நடைபெறாமல் இருக்க தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் பாதுகாப்பு கேட்டால் உடனடியாக பாதுகாப்பு அளிக்கவும் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இன்றைய காவல்துறை ஏன் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இப்பொழுதாவது சட்டப்படி செயல்பட காவல்துறைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆகவே தயவு தாட்சண்யமின்றி மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தேர்தல் கமிஷனும் முறையே ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டுள்ளது.
- தலைவர்கள் தொகுதியில் தடுமாறிய சதவீதங்கள்
- சினிமாவின் மோசமான காலகட்டம் : உண்மையை சொன்ன வைரமுத...
- சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் பிரகாஷ்ராஜ...
- லோக்பால் குழு கூட்டம்-சொத்து கணக்கு வெளியிட்ட ஹசார...
- சிங்கள ராணுவத்தால் தலை, கை, கால், வெட்டி கொல்லப்பட...
- வெற்றி கிடைக்குமா: தி.மு.க., திடீர் சர்வே
- நந்திதா தாஸ்க்கு செவாலியர் விருது
- இலங்கை அரசை புகழ்ந்து பேசிய நடிகை ஸ்ரேயாவுக்கு கட...
- தமிழகக் காவல் துறையின் லட்சணம் இது தான்-ஜெயலலிதா
- ரூ.4 கோடி தருவதாக கூறியும் “வீட்டு விருந்து நிகழ்ச...
- அவருக்கு ஜோடியா ?... கலக்கத்தில் த்ரிஷா
- இன்டர்நெட்டில் சகோதரியின் ஆபாச படத்தை வெளியிட்ட தங...
- உதயநிதி ஸ்டாலினின் விழாவை ரஜினி புறக்கணித்தார் : வ...
- வாய்ப்பு கேட்ட வடிவேலு? பதில் சொல்லாத இயக்குனர்!
- கலைஞர் கேட்ட கேள்வியால் பொன்னர் சங்கரை புறக்கணித்த...
- தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் : ஈ.வி....
- காவல்துறை ஏன் கைகட்டிக் வேடிக்கை பார்க்கிறது என்ப...
- கலைஞர் புகார் : நெடுமாறன் கண்டனம்
- கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட ...
- தங்கபாலு அதிரடி : எஸ்.வி.சேகர் பதிலடி
- சினிமாவாகிறது நடிகை காஞ்சனாவின் வாழ்க்கை வரலாறு!
- தங்கபாலு - யுவராஜா யுத்தம்
- கொளத்தூர் : நூலிழையில் தான் ஸ்டாலின் வெற்றி - தோல்...
- தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் புகார்
- வடிவேலு, குஷ்பூ பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள...
- ரஜினிகாந்த் வாக்குச் சாவடியில் மறு ஓட்டுப் பதிவு ந...

No comments:
Post a Comment